தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium



- 108 -

மிருப்பவும் என்னனை நீடுவாழுமாறுகூறப் பணித்த ஊரவரின் அறியாமையை நோக்கி  யாங்கள் சிரித்தனம் என்றானென்க.

‘முன்னுயி ருருவிற் கேத முயன்று செய் பாவந் தன்னால;  என்றது, இவ்விளைஞர்  யசோதரனும் சந்திரமதியுமாயிருந்தபோது செய்த மாக் கோழியின்  பலியாலாய தீவினையை, இவ்விவரம், ‘செய்த வெந்திரியக்  கொலை‘ என்னும் (யசோ. 312-ம்) பாடலில் வருவதனா லறிக.

எதிரிலுள்ள விலங்கினங்களைக் குறித்து, ‘இன்ன பல்பிறவி'; என்றான். மன்னன் பலியிடப் போகும் உயிருள்ள உருவங்கள் பல என்ப தறிவித்தற்கு,  ‘மன்னுயி்ர';என வலியுறுத்தினார். மன்-மிகுதி. ‘மன்னிலை மிகுதி வேந்தே‘என்பது சூடாமணி நிகண்டு.  (11, 6.)              (58)

அங்குக் குழுமியுள்ள நகரமாந்தர் வியத்தல்

63. 
கண்ணினுக் கினிய மேனி காளைதன் கமல வாயிற்
 
பண்ணினுக் கினிய சொல்லைப் படியவர் முடியக் கேட்டே
 
அண்ணலுக் கழகி தாண்மை யழகினுக் கமைந்த தேனும்
 
பெண்ணினுக் கரசி யாண்மை பேசுதற் கரிய தென்றார்.

(இ-ள்.)  கண்ணினுக்கு இனியமேனி - (காண்பவரின்) கண்களுக்கு இனிமை தரும் மேனியுடைய, காளைதன் கமலவாயில் - அபயருசியின் கமலமலர்போன்ற வாயினின்றுமுண்டான, பண்ணினுக்கு இனிய சொல்லை - கீதத்தினும் இனிய சொற்களை, படியவர் - அவ்விடத்திலுள்ளார் பலரும்,  முடியக் கேட்டு- முற்றவுங் கேட்டிருந்து, அண்ணலுக்கு அழகிது - (இம்மாற்றம்) சிறந்தோனாகிய அபயருசிக்கு ஏற்றதாகும், ஆண்மை  அழகினுக்கு  அமைந்த தேனும் - இவ்வாண்மை அழகுக்கேற்ப அமைந்ததே ஆயினும், பெண்ணினுக்கு  அரசி ஆண்மை




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:01:55(இந்திய நேரம்)