தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium



- 140 -

யின் ஒலியும், கலவி ஆர்ப்ப - சேர்ந்து ஒலியிட, நலம் கவின்று -அழகு மிகப்பெற்று, இனிய காமர் நறுமலர்த் தொடையலே போல் - இனிய அழகான வாசனைவீசும் பூ மாலை வருதல் போல, அலங்கல்    அம்குழல்  - பூமாலை

அணிந்த அழகான கூந்தல்,  பின்தாழ - பின்புறம் தாழ்ந்து அசைய, அமிழ்த முன் மதி அணைந்தாள் - அமிர்தமதி யசோதரன் இருந்த பள்ளியணையை அடைந்தாள். (எ-று.)

அமிர்தமதி சயன அறையை கலன் முதலியன தாழ, பாட, ஆர்ப்ப, தொடையால் போல அணைந்தாளென்க.

சிலம்புதல் - ஒலித்தல்,  அல்குல் - அறை;  இடை. கலை-மேகலை, அமிர்தம் என்ற பதத்திற்கு முன்னாலுடைய மதி - அமிர்தமதி.  கவின்று -அழகுபெற்று; ‘புறவுங் க வி ன் று‘  (பெருங் - 2.4-745)  என்றது காண்க.  நடந்து செல்வதால்  மாலையிலுள்ள  மதுவுண்ண இயலாத வண்டு ஒலித்தலியல்பு.                                                   (17)

இருவரும் இன்பம் நுகர்தல்

90.
ஆங்கவ  ளணைந்த போழ்தி னைங்கணைக் குரிசி றந்த
 
பூங்கணை மாரி வெள்ளம்  பொருதுவந்  தலைப்பப் புல்லி
 
நீங்கல ரொருவ ருள்புக் கிருவரு  மொருவ ராகித்
 
தேங்கம ழமளி தேம்பச் செறிந்தனர்  திளைத்துவிள்ளார்.

(இ-ள்.) ஆங்கு - அவ்விடத்திற்கு, அவள் அணைந்த போழ்தில் -அவ்வமிர்தமதி வந்து சேர்ந்த போது, ஐங்கணை - ஐந்துவகை மலர் அம்புகளை உடைய, குரிசில் - மன்மதன், தந்த - விடுத்த, பூங்கணை மாரிவெள்ளம் - மலரம்பு மழையின் வெள்ளம், பொருது வந்து அலைப்ப - மோதி வந்து தாக்குதலினால்,  (யசோதரன் அவளை), புல்லி - தழுவி, ஒருவர் உள்புக்கு இருவரும் ஒருவராகி - இருவரும், ஒருவர் உள்ளத்தில் மற்றொருவர் மாறிப்புகுந்து ஒன்றுபட்டு, நீங்கலர் - இணை  பிரியாதவர்களாகி, தேம்




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:07:08(இந்திய நேரம்)