தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium



- 192 -

மான (1) ஆர்த்தத் தியானம், நரககதிக்குக் காரணமான(2) ரௌத்ரத் தியானம், மனிதர் தேவர் ஆகிய இரண்டு கதிகளுக்கும் காரணமான (3) தர்மத் தியானம், மோக்ஷகதிக்குக் காரணமான (4) சுக்லத் தியானம் எனப் பொதுவகை நான்கு. அவற்றுள், யசோதரனிடமும் சந்திரமதியிடமும் அடைந்தது, ஆர்த்தத் தியானமாதலின், ‘சிந்தைஅடைந்தது முதலது‘ என்றார். தியான வகைகளை,‘ஆர்த்த ரௌத்திரத்த சிந்தை அறவெறிந் துயிரை மாற்றிற், பேர்த்து முத்திக்கண் வைக்கம் தருமசுக் கிலத்தியானம்‘ என்று(மேரு. 433) வாமன முனிவர் கூறியதனாலும், மற்றும், பதார்த்த சாரம், சுகபோதை  முதலியபல நூல்களிலும் கூறியிருத்தலாலும் அறியலாகும்.  தனக்கு இனிமை தருவன நீங்குங் காலத்திலும், கொடுமை தருவனநேருங் காலத்திலும், நஷ்டம், வியாதி, மரணம் முதலியன நேருங் காலத்திலும் ஏற்படும் துக்க சிந்தனைகளை ஆர்த்தத் தியானம் என்று கூறுவர்.  அவ்வெண்ணத்தால் ஈட்டிய தீயவினைகள் விலங்குகதியில் உய்க்கும் என்றுணர்க.  புகுதல்-ஆன்மாவுடன் சேர்ந்து பந்தமாதல்.

நடுங்கினர், துஞ்சினர் என்பன - முற்றெச்சங்கள்    (75)

உழையர் தம் அரசியை இகழ்ந்து வருந்துதல்

148. 
எண்களுக் கிசைவி லாத விறைவியா மிவடன் செய்கை·
 
கண்களுக் கிசைவ லாத கடையனைக் கருதி நெஞ்சின்
 
மண்களுக் கிறைவ னாய வரனுக்கு மரணஞ் செய்தாள்·
 
பெண்களிற் கோத னாளே பெரியபா வத்த ளென்றார்.

(இ-ள்.) இறைவி ஆம் இவள் செய்கை - அரசியாகிய இவளுடைய செயல்கள், எண்களுக்கு இசைவு இலாத - (ஆன்றோர்குடைய) எண்ணங்களுக்குத் தகுதியற்றவை; கண்களுக்கு இசைவு இலாத கடையனை - காணச்சகியாத (உருவுடைய) கீழ்மகனான பாகனை, நெஞ்சில் கருதி - (தன்) நெஞ்சில் சிறந்தவனாகக் கருதிக்கொண்டு, மண்களுக்கு இறைவன் ஆய வரனுக்கு - மண்ணுலக மக்களுக்கு மன்னனாகிய (தன்) கணவனுக்கு,  மரணம் செய்




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:15:37(இந்திய நேரம்)