Primary tabs
எச்சிலான எருமையூன் சிராத்தத்திற்கு உதவாது. ஆயினம், இதற்குக் கழுவாய் ஒன்றுளது என்றனரென்க. (33)
ஐ, அசை. காதுதல் - தாக்குதல்.
(இ-ள்.) புண்ணிய நூல்களின் நாதனார் - நற்கருமங்களைக் கூறும் நூல்களைக் கற்றறிந்த தலைவர்கள், தேர்ந்துழி - ஆராயுமிடத்து, தீது இது என்ற பிசிதம்உம் - (எச்சில் பட்டதனால் சிராத்தஞ் செய்வதற்குத்) தோஷமாகுமென்று கூறிய இவ்வெருமையூனும், நல்ல சாதம் தகர் முகத்துப்படின் - நல்ல பிறப்பினையுடைய ஆண்யாடு ஒன்றின் வாயில் பொருந்துமாயின், அத்துராதிகள் - யாகம் முதலியவற்றிற்கு, நன்று பூதம் என்றனர் - பெரிதும் பரிசுத்தமானதாகும் என்று கூறினார். (எ-று.)
நாதனார், இவ்வெருமையூன் நல்ல தகரால் நுகரப்படுமாயின் புனிதமாகு மென்றன ரென்க.
பிசிதம் - மாம்ஸம். சாதம் - பிறவி; ஜாத என்னும் வடசொல்லின் திரிபு. தகர் -செம்மறியாட்டுக் கிடாய். நல்லசாதம் தகர் என்றது, யோனியில் பிறவாத ஆட்டை; இது கன்னட காவியத்தால் அறியப்பட்டது. பூதம் - புனிதம் அத்வரம் - யாகம். அத்வராதி என்பது, ‘அத்துராதி‘ என்றாயிற்று. ‘நன்று பெரிதாகும்‘ என்பது தொல்காப்பியம்.
(இ-ள்.) என்றலும் -என்றிவ்வாறு அத் தலைவர்கள் கூறியதும், இணர்பெய்முடி மன்னவன் - பூங்கொத்துக்களால்