தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Nagakumara Kavium



நாககுமார காவியம்

காவியப் போக்கு

நாககுமாரன் சரிதம் 26ஆம் பாடலுடன் தொடங்குகிறது.  இது முதலாக நான்காம் சருக்கம் வரையில் நாககுமாரனின் வீரதீரச் செயல்களும், காதல் களியாட்டங்களும் சிறப்பிக்கப்படுகின்றன.

இறுதிச் சருக்கமான ஐந்தாம் சருக்கம் நாககுமாரனின் முற்பிறப்பு வரலாற்றையும், பஞ்சமி விரத நோன்பையும், அதனால் விளையும் பெரும் பயனையும், துறவு நிலையையும் எடுத்துரைக்கின்றது.

நாககுமாரன் அரசகுல மங்கையரையும் பிறரையும் திருமணம் செய்துகொள்கிறான்.  காவிய நெடுகிலும் இவன் செய்து கொண்ட திருமணங்கள் பல பேசப்படுகின்றன.  அவனும் வீரச் செயல்களைப் போலவே இன்பம் அனுபவிப்பதிலும் நாகலோக வாசிகள் போலக் காணப்படுகிறான்.  மன்னர் பலரும் மாவீரர்களும் இவனுக்கு உற்ற துணைவர்களாயிருந்து இவனிட்ட ஏவலை ஏற்றுப் பணி புரிகின்றனர்.

இத்தகு சீரோடும் சிறப்போடும் வாழ்ந்த இவன் முனிவர்பால் தருமம் கேட்டு, ஞான நன்னிலை பெறுகிறான்.  இறுதியில் தன் மகன் தேவ குமாரனுக்கு முடி சூட்டித் துறவு மேற்கொள்கிறான்.  நாககுமாரன் துறவேயன்றி செயவர்மாவின் துறவு (78), சோமப்பிரபனின் துறவு (107) முதலியனவும் இக்காவியத்துள் இடம் பெறுகின்றன.  எனவே, உலக இன்பங்களில் சிக்கிச் சுழன்றாலும் இறுதியில் துறவு பூண்டு இறைநிலை பெறவேண்டும் என்னும் குறிக்கோளையும் இக் காவியம் எடுத்துரைக்கின்றது.

அருக சமயக் கோட்பாடுகள்

அருக சமயக் கோட்பாடுகளம் இக் காவியத்தில் அங்கங்கே சுட்டப்பட்டுள்ளன.  சினாலயங்களுக்குச் சென்று வணங்குதலும், முனிவர்களைத் தொழுது தருமங் கேட்டலுமாகிய நிகழ்ச்சிகள் இடையிடையே வருதல் காணலாம்.  அருக தேவரைத் துதித்து உளமுருகப் பாடும் பாடல்களும் இக்காவியத்திலுள்ளன.

அருக தேவர் புகழ்மாலை

சிரேணிக மகாராசன் வர்த்தமான மகாவீரரைத் துதித்துப் போற்றும் பாடல்கள் ஐந்து (16-20) முதல் சருக்கத்தில் இடம் பெற்றுள்ளன.

'பொறியொடு வல் வினைவென்ற புனிதன் நீயே
 
பூநான்கு மலர்ப் பிண்டிப் போதன் நீயே!’

என்று ‘முன்னிலைப் பரவலா’க இவை அமைந்துள்ளன.

நான்காம் சருக்கத்தில் நாககுமாரன் சயந்தகிரிச் சினாலயம் பணிந்து முக்குடைக்கீழ் விளங்கும் மூர்த்தியைப் போற்றுகிறான்:



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2017 17:35:53(இந்திய நேரம்)