தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Nagakumara Kavium



நாககுமார காவியம்

கம்பன் விருத்தக் கவித்திறமும்’ காவியம் பாடுவார்க்கு வழிகாட்டியிருக்கின்றன என்னலாம்.

கவிக் கூற்றால் கதை நடத்தல்

கதை நடத்திச் செல்லுகின்ற திறத்திலும் பிற காவிய மரபுகளை இதுவும் பெற்றுள்ளது.  இடையிடையே கவிக் கூற்றாகக் கதைப் போக்கினைத் தெரிவித்து மேலே விவரித்துச் செல்வது ஒரு மரபு.  இம் மரபினை இக்காவியத்துள்ளும் காணலாகும்.

‘செந்தளிர்ப் பிண்டியின்கீழ்’ எனத் தொடங்கும் இக்காவியத்தின் முதற் செய்யுள், தெய்வ வணக்கமும் செயப்படுபொருளும் உரைக்கின்றது.  ‘கொந்தலராசன் நாககுமார னற்கதை விரிப்போம்’ என்று இதிலே தோற்றுவாய் செய்கிறார் கவிஞர்.  இவ்வாறே மூன்றாம் சருக்க முதலிலும்,

அரிவையர் போகந் தன்னி லானநற் குமரன் றானும்
 
பிரிவின்றி விடாது புல்லிப் பெருமலர்க் காவு சேர்ந்து
 
பரிவுட னினிதி னாடிப் பாங்கினாற் செல்லு நாளில்
உரிமையாற் றோழர் வந்து சேர்ந்தது கூற லுற்றேன்’

என்று கதையின் பெருந்திருப்பத்தைக் கவிக்கூற்றாகக் காண்கின்றோம்.

காவியப் பெயர்

இக் காவியத்திற்கு ‘நாக பஞ்சமி கதை’ என்றும் ஒரு பெயர் உண்டு.  வடமொழிக் காவியத்தின் ஒவ்வொரு சருக்க முடிவிலும் இப் பெயரை அதன் ஆசிரியர் மல்லிசேனர் குறிப்பிடுகின்றார்.  விபுல மலையிலுள்ள சமவசரணத்திற்குத் தன் சுற்றத்தாரோடு வந்து வணங்கிய சிரேணிக மகாராசன் கௌதம முனிவரை வணங்கித் தருமங் கேட்கிறான். தரும தத்துவங்களைக் கேட்டபின், அம் முனிவரிடம் ‘பஞ்சமி கதை’யினை உரைக்க வேண்டுகிறான்.  நற்றவர்க்கு இறையான நற் கௌதமர் சிரேணிக மகாராசனுக்குச் சொல்வதாகவே இக் காவியக் கதை அமைந்துள்ளது.  இதனை,

சிரிநற் பஞ்சமி செல்வக் கதையினை
 
செறிகழல் மன்னன் செப்புக வென்றலும்
 
அறிவு காட்சி யமர்ந்தொழுக் கத்தவர்
 
குறியு ணர்ந்ததற் கூறுத லுற்றதே’
 

           (நாக.25)

என வரும் முதற் சருக்கப் பாடலால் அறியலாம்.  இங்கே கவிஞர் வடமொழிக் காவியத்தைப் போல ‘பஞ்சமி கதை’ என்று சுட்டுதல் காணலாம்



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:58:37(இந்திய நேரம்)