தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

| Choolamani |


எனவரும் இதுவேயாம். யானும் இச்செய்யுளை விட்டுவைத்து எஞ்சிய செய்யுட்களுக்கு உரை எழுதிக்கொண்டிருந்தேன். உரை எழுதுங்கால் சமயக்கருத்துக்களை அறியும் பொருட்டு நீலகேசியை யான் ஆழ்ந்து பயின்று வரும் பொழுது அதன் பழைய உரையில் இச்செய்யுளின் பொருள் நன்கு விளங்கும்படி எதிர்பாராத வகையின் ஒரு கருத்தினைக் கண்ணுற்றேன். அதனை உணர்ந்தவுடன் மயக்கிய இச்செய்யுளின் கருத்து எனக்கு உள்ளங்கை நெல்லிக்கனிபோல விளங்குவதாயிற்று. அப்பொழுது,
 
"குடிசெய்வ லென்னு மொருவற்குத், தெய்வ
மடிதற்றுத் தான்முந் துறும்"

               (குறள். 1023)

என்னும் இவ்வருமைத் திருக்குறளை நினைந்து மகிழ்ந்தேன்.

அச்செய்தியாவது முதிர்ந்த மாதுளம் வித்தானது செவ்வரக்குப் பூசி
உலர்த்தி நட்டு வளர்த்தால் சிவந்த மலர்களை ஈனும். காரரக்குப் பூசி உலர்த்தி நட்டுவளர்ப்பின் கருநிற மலர்களை 'ஈனும்' என்பதாம். இச்செய்தி மதிநுட்பத்தால் மட்டும் அறியப்படுவதொன்றன்று. இச்செய்தியை அறிந்திருந்தாலன்றி அச்செய்யுளின் பொருள் விளக்கமாகாது என்பதனை அச்செய்யுளை நோக்கி யுணர்க.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் இந்நூலிற்கு உரை எழுதுவதற்கு யான் விரும்பிய துணை நூல்களை அவ்வப் போது காலந்தாழ்த்தலின்றி எனக்கு அனுப்பி வந்தனர். மேலும் சூளாமணியின் கையெழுத்துப்படிகள் பலவற்றையும் ஆராய்ந்து செய்யுள்களின் பாடவேற்றுமைகள் பலவற்றையும் தொகுத்துள்ள கையெழுத்துப்படி ஒன்றனையும் அக்கழகத்தார் மூலப்படி யோடு வழங்கியிருந்தனர். இப்பாட வேற்றுமைப்படி இந்நூலில் பல செய்யுட்கு உரைகாண்டலில் பேருதவியாய் இருந்தது. இங்ஙனம் அரிதின் முயன்று இப்பாடவேற்றுமைகளைத் தொகுத்தவர் பன்மொழிப்புலவர். தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், எம். ஏ., பி. எல்., எம். ஓ. எல். அவர்கள் என்றும் கழகத்தார் அவர்களிடத்திருந்து இக்கையெழுத்துப்படியைப் பெற்று வழங்கினர் என்றும் நண்பர் இராமசாமிப் புலவரவர்கள் எனக்குக் கூறினர். அப்பாட வேற்றுமை தொகுத்த அச்சான்றோர்க்கும் என் நன்றியறிவு உரித்தாகும்.

முடிமன்னர்களும் குறுநிலமன்னர்களுமாகிய பெருஞ் செல்வர்கள் மட்டுமே செய்வதற்கியன்ற மாபெரும் பணியாகும், இத்தகைய பெருங்காப்பியங்களை உரை எழுதுவித்து அச்சேற்றி வெளிக்கொணரும்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 12:39:45(இந்திய நேரம்)