Primary tabs
எனவே இந்நூலாசிரியர் கார்வெட்டியரசன் விசயன்
என்பவனுடைய காலத்தவர் என்பது புலனாம்.
இந்நூலாசிரியர் இந்நூலினைச் சேந்தன் என்னும்
அரசனுடைய அவையின்கண் அரங்கேற்றியதாகக்
குறிப்பிடுகின்றார். அச்செய்யுள் வருமாறு
:
தேமா ணலங்கற் றிருமா னெடுஞ் சேந்த னென்னுந்
தூமாண் டமிழின் கிழவன் சுடரார மார்பிற்
கோமா னவையுட் டெருண்டார்கொளப் பட்டதன்றே"
சூளாமணியாசிரிய ராகிய தோலாமொழித்தேவர் பாயிரத்தின்கண் "யாமியற்றிய இச்சூளாமணி சேந்தனுடைய அவையின்கண் ணமைந்த சான்றோர்களால் கேட்கப்பட்டு அவர்களால் நல்லநூல் என ஏற்றுக்கொள்ளப்பட்டும் இருக்கின்றது. இனி இந்நூலைப்பற்றிக் கல்லாமாக்கள் கூறும் குறையையாதல் புகழினையாதல் யாம் பொருளாகக் கொள்கின்றிலேம்" என வீறு தோன்ற விளம்புகின்றனர்.