பதிகமே ழெழுநூறு பகருமா கவியோகி
பரசுநா வரசான பரமகா ரணஈசன்
அதிகைமா நகர்மேவி அருளினா லமண்மூடர்
அவர்செய்வாதைகள்தீரும் அனகன்வார் கழல்சூடின்
நிதியரா குவர்சீர்மை உடையரா குவர்வாய்மை
நெறியரா குவர்பாவம் வெறியரா குவர்சால
மதியரா குவர்ஈசன் அடியரா குவர்வானம்
உடையரா குவர்பாரில் மனிதரா னவர்தாமே.
-தி.11 நம்பியாண்டார் நம்பி