தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


மழைகூடப் படவில்லை. விளக்கோ சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது.

குருஞானசம்பந்தராயினார்

வைகறைப்பொழுதில் ஞானப்பிரகாசரின் பத்தினியார் சாணம் தெளிக்க வருங்கால், ஞானசம்பந்தர் அனுபூதி நிலையில் நிற்பதையும், விளக்குச் சுடர்விட்டுப் பிரகாசிப்பதையும் கண்டு உட்சென்று தம் பதியிடம் வியப்புடன் வெளியிட்டார். ஞானப்பிரகாசர் விரைந்து வந்து பார்த்து, ஞானசம்பந்தரிடம் திருவருள் பெருகுகின்ற நிலையைக் கண்டு மகிழ்ந்து “ஞானசம்பந்தா! நீ ஆசாரியனாக இருந்து, பக்குவம் உடையவர்களுக்கு ஞானோபதேசம் செய்து ஆசாரியனாக விளங்குவாயாக” என்று அருளினார். அப்பொழுது ஞானசம்பந்தர்,

கனக்கும் பொதிக்கும் எருதுக்கும் தன்னிச்சை கண்டதுண்டோ
எனக்கும் உடற்கும் எனதிச்சையோ இணங்கார்புரத்தைச்
சினக்குங் கமலையுள் ஞானப்பிர காச சிதம்பர இன்று
உனக்கிச்சை எப்படி அப்படி யாக உரைத்தருளே

என்ற பாடலைப்பாடி “எங்குச்சென்று எவ்வாறு இருப்பேன்” என்று விண்ணப்பிக்க, ஞானப்பிரகாசர், “மாயூரத்தின் ஈசான்ய பாகத்தில் வில்வராண்யமாய் உள்ளதும், திருக்கடவூரில் நிக்ரகம் பெற்ற தருமனுக்கு அனுக்ரகம் செய்ததும் ஆன தருமபுரத்தில் இருந்து கொண்டு, அன்பு மிக உண்டாய் அதிலே விவேகமுண்டாய்த் துன்பவினைத் துடைப்ப துண்டாய் இன்பம் தரும் பூரணத்துக்கே தாகமுண்டாய் ஓடி வருங்காரணர்க்கு உண்மையை உபதேசித்துக் குருவாக விளங்குவாயாக” என்று கட்டளையிட்டருளினார். அன்று முதல் ஞானசம்பந்தர் “குருஞானசம்பந்தர்” என்று வழங்கப்படுகிறார்.

தருமபுரத்தில் ஆதீனத் திருமடம் கண்டார்

ஆசிரியர் ஆணையை மறுத்தற்கு அஞ்சியவராய் கன்றைப் பிரிந்த பசுப்போல வருந்தும் குருஞானசம்பந்தரை நோக்கி “குருவாரந்தோறும் வந்து நம்மைத் தரிசிப்பாய்” என்று தேறுதல் கூறினார் ஞானப்பிரகாசர். குருஞானசம்பந்தர் தம் குரு ஆணையைச் சிரமேற்கொண்டு தமது ஆன்மார்த்த மூர்த்தியுடன் தருமபுரத்திற்கு எழுந்தருளி தருமபுர ஆதீன மடாலயத்தை நிறுவியருளினார். ஞானானுபூதியில் திளைத்துப் பல பக்குவ ஆன்மார்க்களுக்குச் சிவஞானோபதேசம் செய்து


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 22-09-2017 17:57:46(இந்திய நேரம்)