தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


அனுபூதிச் செல்வராய்த் திகழ்ந்தார். அவர் அனுபூதியில் பொங்கித் ததும்பிப் பூரணமாய எழுந்த சிவஞானப் பேரருவியே சிவபோக சாரம், சொக்கநாத வெண்பா, முத்தி நிச்சயம், திரிபதார்த்த ரூபாதி தசகாரிய அகவல், சோடசகலாப் பிராசாத ஷட்கம், சொக்கநாதக் கலித்துறை, ஞானப்பிரகாச மாலை, நவமணி மாலை ஆகிய எட்டு நூல்கள் ஆகும். பாடல்கள் எளிமையும், இனிமையும் பயப்பனவாய் பதி, பசு, பாசம் என்ற முப்பொருளுண்மையைத் தெளிய விளக்குவனவாய் உள்ளன.

ஆனந்தபரவசருக்கு உபதேசம்

குருஞானசம்பந்தர் தம்மை அடைந்த பக்குவமுடையவர்களுக்கு உபதேசித்து அனுபூதிமானாக விளங்கும்போது, உபதேச பரம்பரையை வளர்த்துவர அதிதீவிர பக்குவ நிலையிலிருந்த ஆனந்தபரவசருக்கு உபதேசித்துத் தாம் ஜீவசமாதி கூடியருளினார்கள். அதிதீவிர நிலையில் இருந்து ஆனந்தபரவசர் தமது குருநாதர் உபதேசித்த ஞானநிலை விரைவில் கூடியவராய், தம் ஞானாசாரியார் ஜீவசமாதி கூடிய ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் ஆலய விமான ஸ்தூபியைத் தரிசித்தவாறு தாமும் சீவசமாதி கூடினார்கள்.

மீண்டும் எழுந்தருளினார்

அதுகண்ட ஏனைய சீடர்கள் குருமரபு விளங்க வேண்டுவதை ஆசாரியர் திருமுன் விண்ணப்பிக்க, பரமாசாரிய மூர்த்திகள் ஜீவ சமாதியினின்றும் எழுந்து வந்து ஸ்ரீ சச்சிதானந்த தேசிகருக்கு உபதேசம் செய்து அனுபூதி நிலை வருவித்து ஞானபீடத்து இருத்தி வைகாசிமாதம் கிருஷ்ணபக்க ஷஷ்டி திதியில் தாம் முன்போல் ஜீவ சமாதியில் எழுந்தருளினார்கள்.

தருமையாதீனப் பணி

கி.பி. 16-ம் நூற்றாண்டில் ஸ்ரீ குருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பெற்ற திருத்தருமையாதீனம் அதுமுதல் வழி வழியாக விளங்கி, மொழித் தொண்டும், சமயத்தொண்டும், சமூகத் தொண்டும் ஒல்லும் வகையெல்லாம் ஆற்றி வருகிறது. இப்பொழுது ஞானபீடத்தில் இருபத்தாறாவது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் எழுந்தருளியிருந்து அருளறப்பணிகள் பல இயற்றி அருளாட்சி புரிந்து வருகிறார்கள்.

வாழ்க தருமையாதீனம்!                                      வளர்க குருபரம்பரை


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 22-09-2017 18:01:50(இந்திய நேரம்)