தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Puranam_6:-

 

திரு. குல. சபாநாதன் அவர்கள் உதவினர். அத்திருக்கோயில் போர்த்துகீசிய அரசினர் இடித்துத் தகர்த்தனர் அதன் முன் அவர்களே அதன் அமைப்பினைக் காட்ட வரை கீறிய படம் எழுதி வைத்திருந்தனர். அதனை மிக முயற்சியுடன் கண்டெடுத் துதவிய பெருமை அன்பர்திரு. குல. சபாநாதன் அவர்களுக்குரியது. திருக் காஞ்சிபுரம் படங்களைப் பட்டு ஜவுளி வியாபாரம் அன்பர் S.R. ஆதிநாராயண முதலியார் அவர்கள் உதவினர். ஏயர்கோன் கலிக்காம நாயனார்சரிதம் பற்றிய படங்களைப்பெறச் சீகாழி அன்பர் திரு. சோமசுந்தரம் பிள்ளை அவர்கள், மேற்படி கிராமம் கணக்கு திரு. வைத்தியலிங்கம் பிள்ளை, நிர்வாக அதிகாரி திரு. முத்துசாமி பிள்ளை, சீகாழி மிராசுதார் திரு. M.T.K. குழந்தைவேல் செட்டியார் ஆகிய இவர்கள் செய்த பேருதவி பற்றி முன்னமே அறிவித்திருக்கிறேன். திருக்கேதாரம் படங்களை மிக்க சிரமத்துடன் நேரிற்கண்டு பெற்று அனுப்பிய அன்பர் முத்துப்பட்டினம் திரு, சொ, திருநாவுக்கரசு செட்டியார் அவர்கள். திருவொற்றியூர், ஞாயிறு, திரு. P.E. காபாலி அவர்கள். இவர்கள் எல்லாருக்கும், மற்றும் இவ்வகையில் உதவிய எல்லா அன்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை அறிவித்துக் கொள்கிறேன்.
4. படிப்பவர்கள் இலகுவில் வாங்கிப் பயனடையும் பொருட்டு இப்பகுதியில் வரும் திருமூலதேவ நாயனார் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் - சிறுத்தொண்ட நாயனார் சரிதங்களைத் தனிப் பதிப்பாகவும் வெளியிட்டுள்ளேன்.
5. யாழ்ப்பாணம் அன்பர் திரு. மு. மயில்வாகனம் அவர்கள் இவ்வெளியீட்டைப் பற்றிய உதவியின் பொருட்டு அவ்வூர், "இந்து சாதனம்" பத்திரிகையில் விண்ணப்பம் வெளியிட்டுப் பொருள் திரட்டி உதவினார். அவர்களுக்கு என் நன்றி உரியது.
அன்பர்கள் ஆதரவும் திருவருளும் முன்னிற்க.

கோவை
சேக்கிழார் நிலையம்
1-2-1953

அடியேன்
C. K. சுப்பிரமணிய முதலியார்
உரை-பதிப்பு-ஆசிரியர்

 
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 18:57:59(இந்திய நேரம்)