தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thiruthondar Puranam6-மேல்

திருப் புன்கூர் - 3161. (வ.20) திருப்பெருமங்கலத்துக்குத் தென்பால் ஒரு நாழிகை யளவில் உள்ளது. நந்தனார் வழிபட்டுத் திருப்பணி செய்த பதி. ஏயர்கோன் கலிக்காம நாயனார் வழிபட்டுத் திருப்பணி யனேகமும் செய்து 24 வேலி நிலமும் கொடுத்த பதி.
திருப்பூந்துருத்தி - 3225. (தெ.11) திருநாவுக்கரசு நாயனார் திருமடம் அமைத்துப் பல நாள் தங்கி எழுந்தருளியிருந்த பதி. திருஞானசம்பந்த நாயனாரும் அத்திருமடத்தில் எழுந்தருளி யிருவரும் அளவளாவியிருந்த பெருமையுடையது.
திரு மயானம் - (திருக்கடவூர்) 3299. (தெ. 48)
திரு மழபாடி - 3226. (வ. 54)
திரு வலஞ்சுழி - 3222. (தெ. 25)
திரு வலம்புரம் - 3301. (தெ. 44)
திரு வலிவலம் - 3197. (தெ. 121)
திரு வாஞ்சிமம் - 3214. (தெ. 70)
திரு வாழ்கொளிபுத்தூர் - 3272. (வ. 29)
திரு வீழிமிழலை - 3211. (தெ. 61)
திரு வெண்காடு - 3302. (வ. 11)
ஆளுடைய நம்பிகள் - திருநாவலூராளி - 3163; நாவலூர்மன்னனார் - 3170; நாவலூர்நாவலனார் - 3176; முனைப்பாடித் தலைவர் - 3218; பரவையார்தனித் துணைவர் - 3283; முனைப்பாடித் திருநாடர் - 3284; நாவலர் தங் காவலனார் - 3293; திருவாரூர்த் தம்பிரான் றோழர் - 3312; தமிழ்வேந்தர் - 3402.
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 19:00:19(இந்திய நேரம்)