Primary tabs
அந்நூலிலுள்ள நான்மாடக்கூடலான வரலாற்றிலும்,
இதிலுள்ள நாக மெய்த
வரலாறும் மாயப் பசுவை வதைத்த வரலாறும் அதிலுள்ள
மதுரையான
வரலாற்றிலும், இதிலுள்ள திருநகரஙகாண்ட வரலாறு
அதிலுள்ள புலிமுலை
புல்வாய்க் கருளின வரலாற்றிலும் அடங்கியுள்ளன.
அதிருள்ள மூர்த்தியார்க்கு
அரசளித்தது. காரியார் நாரியார் பாப்பகுந்தது,
புலிமுலை புல்வாய்க் கருளினது
என்னுந் திருவிளையாடல் இந்நூலிற் காணப்பட்டில.
இரண்டிலும் கதை
மாறுபாடுகளும் உள. இந்நூல் இன்ன பாண்டியன் மகன்
என்று பாண்டியர்
வழியை இடைவிடாமற் கூறிச் செல்வதுடன், இன்ன
பாண்டியன் காலத்து
இன்ன திருவிளையாடல் நடந்ததென்றும் கூறுகிறது; அந்
நூல் அங்ஙனம்
கூறிற்றிலது; 1.மலயத்துவசன். 2. சுந்தரமாறர் 3.
உக்கிரனார், 4. தத்தன், 5.
வீரமாறன், 6. வரகுணர், 7. வரகுணருடைய மைந்தர்
என்னும் பாண்டியர்களின்
பெயர்களை மட்டுமே அது கூறுகின்றது. திருநகரங்
கண்டது தவிர. வேல்வளை
செண்டு கொடுத்ததுகாறும் முதலிலுள்ள பதினொரு
திருவிளையாடல்கள் இரு
நூலிலுல் ஒரே முறையிலும், பின்புள்ள
திருவிளையாடல்கள் முறை
மாறியுமுள்ளன. இந்நூல் கூறம் பாண்டியர்
பெயர்களிற் பெரும் பாலன
வடமொழியில் எழுதுதற்பொருட்டுப் படைத்துக் கொண்டன
வாதல்
வேண்டுமென்பது பழந்தமிழ் நூல்களின்
உணர்புடையார்க்கு விளங்கும்.
திருவிளையாடல்களின் முறைவைப்பில் அந்நூலினும்
இந்நூல்
பொருத்தமுடையதாகத் தோன்றுகிறது. சில
நுற்றாண்டுகளின் முன்பு தோன்றிய
வேறு சில நூல்களிலும் நம்பி திருவிளையாடலின் முறை
வைப்பே
காணப்படினும், அதனாற் பெறப்படுவது அவற்றுள்
ஒன்றைப் பார்த்து ஒன்று
அமைக்கப்பட்டது என்பதன்றி, அம்முறையே
பொருந்துவதென்ப தாகாது.
திருவிளையாடல் அறுபத்து நான்கில் மாணிக்கவாசகர்
காலத்து நிகழ்ந்தன 27,
28, 38, 30 - ஆம் திருவிளையாடல்களாகவும்,
திருஞானசம்பந்தர் காலத்து
நிகழ்ந்தன 37, 38 - ஆம் திருவிளையாடல்களாகவும்,
மெய்க்காட்டிட்டது,
அட்டமாசித்தி பகர்ந்தது, தண்ணீர்ப்பந்தர்
வைத்தது, புலிமூலை புல்வாய்க்
கருளினது, பன்றிக்குட்டிகளுக்கு அருள்புரிந்தது,
கரிக்குருவிக்கு அருள்
புரிந்தது என்பன முறையே 39, 42, 43, 53, 59, 60 -
ஆம்
திருவிளையாடல்களாகவும் அந்நூல்களில் அமைக்கப்
பெற்றுள்ளன;
அட்டமாசித்தி பகர்ந்தது முதலாக இங்கெடுத்துக்
காட்டியவைகளை
மாணிக்கவாசகர் திருவாசகத்துக் கூறியிருப்பது
அம்முறை பிழைபாடுடையது
என்பதைக் காட்டும்; மற்றும், மதுரையானது,
இந்திரன் முடிமேல் வளை
யெறிந்தது, திருவாலலாயானது என்பவற்றை முறையே 34,
44, 47 ஆம்
திருவிளையாடல்களாக அமைத்திருத்தல் முதலியன
தமிழாராய்ச்சியாற்
பெறப்படும் உண்மை வரலாற்றுடன் மாறுபடுவன வாகும்.
இனி, பரஞ்சோதி முனிவரியற்றிய இத் திருவிளையாடற்
புராணத்திற்கு
முதனூல் வடமொழியிலுள்ள ஆலாசிய மான்மியம் என்றும்,
இது பதினெண்
புராணங்களி லொன்றாகிய கந்தபுராணத்தின் ஓர்
பகுதியாம் என்றுஞ்
கூறப்படுகின்றது. தர மான்மியங்களைப்பதினெண்
புராணங்களி லொன்றனோடு
இயைத்துரைப்பது அவற்றின் பெருமையை மிகுத்துக்
காட்டவேண்டு மென்னும்
கருத்தினாலாம் என்பது நல்லறிவுடையா ரனைவர்க்கும்
உடன்பாடாகும்.
யாதானும் ஒரு தமிழ் நூல் ஆரியத்தினின்று
மொழிபெயர்க்கப் பட்டதானால்
மட்டும் யாவரும் ஒத்துக் கொள்ளத்தக்க