தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Nagakumara Kavium


- X -

பெருமை யுடையதாம்; அதுவும் வேத ஆகம புராண இதிகாசங்களில்
ஒன்றைச் சார்ந்ததாகவும், பின் நிகழப்போகிய வரலாறுகளை முன்னரே கூறி
வைத்ததாகவும் இருக்க வேண்டும் என்னும் இத்தகைய போலிக் கொள்கைகள்
பிறருடைய பழக்கங் காரணமாகச் சென்ற சில நூற்றாண்டுகளிலிருந்த தமிழ
மக்களிடையே தோன்றின. அவை தமிழ் நூல்கள் சில மறைந்தொழியும் படி
வடமொழி மூலம் இன்றென்று புறக்கணித்தொகுக்குமாறும், சில தமிலு
நூல்களை ஆரியத்தில் மொழிபெயர்த்துக்கொண்டு அவற்றினின்று இவை
வந்தனவென்று காட்டுமாறும் தூண்டக் கூடியவாதல் காண்க. எனினும்,
அக்கொள்கைகள் வலியுற்று நின்ற காலத்தில் ஒரு தமிழ்ப்புலவர் அந்நெறியே
சென்றிருப்பின், அவர் அவற்றைக் கடக்கும் மதுகையிலராயினா ரென்பதன்றி,
அவர்மீது வேறு குற்றம் சுமத்துதல் சாலாது. இற்றை நாளையிலும் இத்தகையோ
ரிருப்பதே பெரியதோர் வியப்பாகும். இன்னோர் இன்னமும் இருக்கின்றன
ரென்பதனைத் திருவாலவாயுரடயார் திருவிளையாடற்புராண முகவுரை
6-ஆம்பக்கத்தில் மகாமகோபாத்தியாய உ. வே. சாமிநாதையரவர்கள் எழுதி
யுள்ளதனா லறிக. சில ஆண்டுகளுக்கு முன்பு சித்தாந்த நூற்பயிற்சி
வாய்ந்தவராயிருந்த ஒருவர் குமரகுருபர சுவாமிகளின் சரிதத்தைத் தமிழில்
எழுதி வைத்துக்கொண்டு, இதற்கு எப்படியாவது வடமொழியில் மூலம்
கற்பித்துவிடவேண்டுமெனத் தாம் எண்ணியதை என்னிடம் கூறியது முண்டு!
தனித்தமிழ் நூல்களாகிய பெரியபுராணம் போல்வனவற்றைச் சிலர் ஆரியத்தில்
மொழிபெயர்த்து வைத்துக் கொள்ள, ஆரியத்தினின்று இவை மொழி
பெயர்க்கப்பட்டனவென்று கூறும் ஒன்றிரண்டுபேர் இன்னுமிருக்கின்றனரே.
திருவிளையாடற் புராணம் ஆரியத்தினின்று இவை மொழிபெயர்க்கப்
பெற்றதாயினும், இதிற் கூறப்படும் தருவிளையாடல்களெல்லாம் செந்தமிழ்ப்
பாண்டி நாட்டிலே தமிழ மக்களிடையே தமிழ மொழியாற் பேசியும் எழுதியும்
நிகழ்த்திப் போந்தன வாகலின், இவ் வரலாறுகள் ஆரியத்தில் எழுதப் படு
முன்பே தமிழின் இருவகை வழக்கிலும் பயின்றனவாதல் வேண்டுமென்றும்,
இவற்றை வடநூற் புலவர் அம்மொழியில் எழுதுங்கால் தமிழ் வழக்குகளை
நன்கு அறியாமை முதலிய காரணங்களாற் சில பிறழ்ச்சிகள் நிகழ்ந்திருத்தல்
இயல்பென்றும், இந் நூலாசிரியர் வடநூன் மேற்கோளாகக் கதைகளை
எடுத்துக் கொண்டனராயினும் பழந் தமிழ் நூல்களின் கருத்துக்களையும்
சொற்களையும் தொடர்களையும் எடுத்தமைத்தே இந்நூலை அழகுபெறச்
செய்திருக்கின்றன ரென்றும் தமிழ் மக்கள் உணரவேண்டும். கதைகளிற் சில
பிறழ்ச்சி நிகழ்ந்திருப்பினும் இந்நூல்களின் நோக்கம், சரித்திர வாராய்ச்சி
செய்வதன்றி, முழுமுதல்வனாகிய இறைவன் அடியார்களுக்கு எளிவந்து
அருள்புரியும் பெருங்கருணைத் திறத்தை உணர்த்தி உயிர்களை உண்வித்தலே
யென்பதை உன்னின், அஃதோரிழுக்காகத் தோன்றுமாறில்லை.

இனி, இந்நூலாசிரியராகிய பரஞ்சோதி முனிவர் ஏறக்குறைய 280
ஆண்டுகளின் முன்பு, சோழ மண்டலத்திலே, திருமறைக் காட்டில் வழிவழிச்
சைவர்களாகிய அபிடேகத்தர் மரபில் மீனாட்சி சுந்தர தேசிகர் என்பவர்க்குப்
புதல்வராய்த் தோன்றியவர்; தன்தையாரிடத்தில் முறையானே தீக்கைகள்
பெற்று, தமிழிலும் வடமொழியிலுமுள்ள பலவகையான அரிய நூல்களையும்
கற்றுத் துறைபோயவர்; சிவபத்தி அடியார்பத்தி மிக்கவர்;
அங்கயற்கண்ணம்மையின் திருவடிக்கு மிக்க அன்பு பூண்டவர்; இவர்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 19:14:12(இந்திய நேரம்)