தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Library

  •  
     'கற்றில னாயினுங் கேட்க வஃதொருவற்
     கொற்கத்தி னூற்றாந் துணை'
    என்றுந் திருக்குறள் விளம்புகின்றது. உண்மை யிதுவாதலில்,
    எல்லா நூலும் எல்லாருக்கும் பொருள் விளங்குமாறு
    அமைந்திருக்க வேண்டு மென்கிற கொள்கை தவறு -
     
     'எல்லார்க்கு நன்றா யிருப்பதில்லை யாதொன்றும்
     எல்லார்க்கும் பொல்லாத தில்'

    என்பது பெரியோருடைய கொள்கை.

    இங்கிலிஷ் பாஷையைக் கற்கும் அநேகர் தமிழ் சுய
    பாஷையானதால் அது தானே வரத்தக்கது, பிரயாசப்பட்டுப்
    படிக்க வேண்டியதில்லை என்கிற எண்ணத்தினாலும், படித்தாலும்
    தற்காலத்திற் பயனில்லை என்கிற வெறுப்பினாலும், கற்கவேண்டிய
    காலத்தில் தமிழ் இலக்கியங்களில் ஒன்றையாவது கற்றுக்கொள்ளக்
    கவலைப்படாமல் மெத்த அசட்டை செய்து விட்டுவிட்டு, அப்புறம்
    ஏதோ ஒரு காலத்தில் சமயம் நேரிடும் போது தமிழ்ச்
    செய்யுட்களில் இரண்டொன்றை மட்டும் வாசித்துப் பார்த்து, அது
    தங்களுக்கு விளங்காமையினிமித்தம் பிரயோஜனமில்லை யென்
    றெறிந்துவிடுகிறார்கள். இது தமிழ்ச் செய்யுளின் குற்றமல்ல.
    இங்கிலிஷ் இலக்கியத்தில் தேறுவதற்குச் செல்லுங் காலத்திலும்,
    படும் பிரயாசத்திலும், பத்திலொருபாகமாவது தமிழ்
    இலக்கியத்திற்கு உபயோகப்படுத்தி, அதன்பேரிற் குறை
    சொல்வார்களானால், அது ஒரு வேளை நியாயமாயிருக்கும்.
    அப்படிக்கின்றி, தமிழில் ஒரு நூலையாவது ஒரு வருஷமாவது
    தீரத்தெளியச் செவ்வையாய்ப் படியாமல், எடுத்த செய்யுள் தனக்கு
    விளங்கவில்லை யென்று குறை சொல்வது சரியல்ல. கூர்மைப்
    புத்தியுடைய எவராவது இரண்டு வருஷம் தமிழ் இலக்கியங்களிற்
    பழகுவாரானால் எடுத்த காவியத்துக்கு அர்த்தஞ் சொல்ல
    அருகராவார் என்பது யாவரும் அநுபவமா யறியக்கூடிய
    விஷயமே. அந்நிய பாஷைக்காரருங்கூடத் தங்களுக்குப்
    போதுமான ஆசையிருக்கும் விஷயத்தில், அதிசுலபமாய்த் தமிழ்
    நூல்களிற் பாண்டித்திய மடைந்திருக்கிறார்கள். ஆதலால், தமிழ்
    இலக்கியத்திற் சற்றுப் பிரியமுள்ளவர்களுக்கு
    'இரக்ஷணிய யாத்திரிகம்' என்னும் இந்நூல் வெகு சுலபமாய்
    விளங்கக் கூடியதேயன்றிக் கஷ்டமாயிருக்கிறதென்று
    கைவிடக்கூடிய நூல் அன்று.

         8. நற்போநகத்திற் பிரசித்தப்படுத்தியிருந்த செய்யுட்களை
    வாசித்துப் பார்த்துவந்த அநேகர் நூல் முற்றுப்பெற்ற தென்றறிந்து
    இந்தப் பிரபந்த முழுதும் அச்சிடுவிக்க வேண்டுமென்று விரும்பிக்
    கேட்டுக் கொண்டதினால், அச்சிடுஞ் செலவுக்குப் போதுமான
    பிரதிகள் முந்திக் கையொப்பமாகிறதா வென்றறிந்து, அதன்மேல்
    அச்சிடுவிக்கும் நோக்கமாக, மாதிரிக்குச் சில பாடல்களைக்
    காட்டிச் சென்ற 19-ம் நவம்பர் மாஸத்தில் பிராஸ்பெக்டஸ்
    ஒன்று அச்சிடுவித்துக் குருமார், வித்துவான்கள், கல்விமான்கள்
    பலருக்கும் அனுப்பியிருந்தேன். நானூறு பிரதிக்கு அதிகமாகக்
    கையொப்பம் கிடைத்தது. அத்தோடு அவரவரே தங்கள் தங்கள்
    விருப்பத்தையும் வெளியிட்டார்கள்.

    பிராஸ்பெக்டஸை யனுப்பி யதன் மூலாமாய்க் கிடைத்த
    கையொப்பத்தை ஆதரவாக்கி இந்நூலை யச்சிடுவிக்க முயன்று
    கொண்டிருக்கையில், நான் வசிக்கிற திருநெல்வேலி நாட்டுக்
    கிறிஸ்து

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:16:49(இந்திய நேரம்)