Primary tabs
-
சபைக்குப் பிரதானிக்கமுள்ள ரெவரென்று டி. உவாக்கர் (Rev. T.
Waker. M.A.) என்ற குருத்துவர் தமிழில் நல்ல தேர்ச்சி
யுடையராதலின், இந்நூலை எப்படியும் சீக்கிரத்தில் பிரசுரமாக்கிப்
பயன்படச் செய்யவேண்டுமென்று விரும்பி, என்னுடைய செலவில்
அச்சிடுவதைப் பார்க்கிலும் ஓர் சங்கத்தார் மூலமாய் அப்படிச்
செய்தால் புஸ்தகத்தின் விலை மெத்தச் சஹாயமாகவும், அதனால்
வெகு சுலபமாக நூல் பல இடங்களிலும் பரம்பவும், கூடியதென்று
உத்தேசித்து, டாக்ட்டர் மர்டாக் (Dr. Murdoch) துரையோடு பேசி
முதற் பதிப்பு மட்டும் அவர்கள் செலவில் அச்சிடுவித்து
உபயோகப் படுத்திக்கொள்ளும்படி ஏற்பாடு செய்து என்னிடஞ்
சொன்னதின் பேரில், அதற்கு இணங்கிப் பிரதியை அவர்களுக்கு
அனுப்பினேன். எவ்வாற்றானும், புஸ்தகம் பூரணமாய் அச்சிட்டு
முடிய என் கண்கள் கண்டது. இது விஷயத்திற் கிடைத்த தேவ
இரக்கம் பெரிது. இந்த நூல் தமிழ் நாட்டுக்குப் பிரயோஜனமுள்ள
தென்று கண்டு அச்சிட்டுப் பிரசித்தப்படுத்த முயன்று, தக்கவாறு
உதவி புரிந்து, வெளிப்படுத்திய ரெவரென்று டி. உவாக்கர்
என்கிற குரு தீக்ஷதருக்கும், வைதீகப் பிரவர்த்தகரான டாக்ட்டர்
மர்டாக் துரைக்கும் நன்றியறிந்த வந்தனம் சொல்லுகிறேன்.அரும்பத அகராதியில் சில முக்யமான பதங்கள் விடுபட்டுப்
போயினவென்று பின்னர்த் தெரியவந்தது. இரண்டாம் பதிப்புத்
காலத்தில் இந்தப் பதிப்பில் விடுபட்ட அரும்பதங்களையும்,
திருத்தாது தவறி நின்ற பிழைகளையுந் திருத்திச் சேர்த்து
அச்சிடுவிக்கக் குறிப்பிட்டிருக்கிறேன்.இவ்வாறு, இரக்ஷணிய புண்ணியம் தமிழ்நாட்டில் வெளியாக,
அற்பக் கருவியாக என்னை யுருப்படுத்தித் தொடங்கிய
வேலையை முற்றுப் பெறச் செய்த தன்னிகரில்லாப் பாட்டுடைத்
தலைவனாகிய ஸ்ரீ கிறிஸ்து பகவானுடைய உபய
சரணாரவிந்தங்களுக்கு அனந்த ஸ்தோத்திரம்.
'குணநாடிக் குற்றமு நாடி யவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.''காய்த லுவத்த லகற்றி யொருபொருட்கண்
ஆய்த லறிவுடையார் கண்ணதே.'பாளையங்கோட்டை,
மே-1-1894.H. A. கிருஷ்ணபிள்ளை.