தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • மஹாவித்வான் கிருஷ்ண பிள்ளை

    அவர்களது

    ஜீவிய சரித்திர சுருக்கம்

    (பண்டிதர் ஜே. எஸ். மாசிலாமணி ஐயர் எழுதியது)

    1. சரித்திரம்

     

    நீர்வள நிலவளங்களோங்கிய திருநெல்வேலி நாட்டிலே,
    பாளையங்கோட்டைக்குச் சமீபத்திலுள்ள இரட்டியாபட்டி யென்னும்
    கிராமத்திலே, வேளான வருணத்திலே, சங்கர நாராயணபிள்ளை
    யென்னும் ஒருவர் இருந்தார். இவர் சிறந்த தமிழ்ப்புலவர்.
    வைஷ்ணவ மதத்தினர். நித்திய கர்மானுஷ்டானங்கள் இராமாயண
    அர்ச்சனை ஜெபதப விரதாதிகள் முதலியவற்றை விடாதுசெய்து
    வருபவர். இராமாயணம் மகா பாரதம், நாலாயிர திவ்யப் பிரபந்தம்,
    பிள்ளைப் பெருமாள் ஐயங்காரியற்றிய அஷ்டப் பிரபந்தம்
    முதலிய வைஷ்ணவ சமய நூல்களை ஐயத்திரி பறக்
    கற்றுணர்ந்தவர். கம்பராமாயணப் பிரசங்கம் செய்வதில் விசேஷ
    திறமை வாயந்தவர். இவரது மனைவியார் பெயர்
    தெய்வநாயகியம்மாள். பத்தாவே தன் தெய்வம் என்னும்
    பதிவிரதையாகிய இம்மாது இராமாயணக் கவிகளைப் பாடவும்
    பொருள்படுத்தவும் கூடியவள். இவ்விருவருக்கும் பிறந்த பெண்
    தவறிவிட்டபின், வெகுகாலம் பிள்ளையில்லை. பண்டிதருக்கும்
    வயது முப்பத்திரண்டாயிற்று. புத்திர பாக்கியம் இல்லாமையால்
    இவ்விருவரும் மிகவும் வருந்தி, பிரார்த்தனை விரதம் தான தர்மம்
    க்ஷேத்திர யாத்திரை முதலியவற்றை முயற்சியாய் நடப்பித்து
    வந்தனர்.

    இவ்வாறு நிகழ்ந்து வருங்காலத்தில் பண்டிதர் உத்தியோக
    விஷயமாக கரையிருப்பு என்ற கிராமத்தில் குடியிருந்த காலத்தில்,
    இன்றைக்குச் சரியாய் நூறு வருஷங்களுக்குமுன்னே, அதாவது
    கொல்லம் ஆண்டு 1003 சித்திரைமாதம் 12ஆம் தேதிக்குச் சமமான
    1827ஆம் வருடம் ஏப்பிரல் மாதம் 23ஆம் நாள், திங்கட்கிழமையன்று,
    இவர்களுக்கு ஒரு சற்புத்திரன் ஜனனமானான். பிதா மாதாக்களுக்கிருந்த
    மகிழ்ச்சிக்கு அளவில்லை. பசும்பொன் போன்ற சிவந்த மேனியுடைய
    இக்குழந்தைக்கு கிருஷ்ணன் என்று நாமகரணம் சூட்டினர். இதற்கு
    மூன்று வருஷங்களுக்குப்பின் பிறந்த பெண்பிள்ளை ஒரு வருஷத்தில்
    இறந்துவிட்டது. கிருஷ்ணன் பிறந்த ஏழு வருஷத்துக்குப் பிறகு
    இன்னொரு சற்புத்திரன் தோன்றினான். இக்குழந்தைக்கு
    முத்தையா என்று பெயரிட்டனர்.

    இவ்விருவரையும் பண்டிதர் வைஷ்ணவ
    சம்பிரதாயத்துக்குரியராய் வளர்த்துவந்தார். இவ்விருவருக்கும்
    தாமே குருவாக இருந்து தமிழ்க் கல்வி கற்பித்து வந்தார்.
    வைஷ்ணவ சமய நூல்களாகிய கலம்பகம் திருவாய்மொழி,
    சடகோபரந்தாதி முதலிய நூல்களை இவர்கள்
    சிறுவர்களாயிருக்கும்போதே பாராயணம் பண்ணிவந்தார்கள்.
    கிருஷ்ணன் பதினான்கு வயது வாலிபனாயிருக்கையில்
    கம்பராமாயணத்திலுள்ள கவிகளைப்

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:22:34(இந்திய நேரம்)