தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Library


  • வந்து கொடுப்பார். கல்வித்திறமையும் செல்வாக்குமுள்ள ஒரு
    கிறிஸ்தவ வித்வான் அந்நியனாகிய இந்த வாலிபனுக்கு
    இவ்வளவு பெரிய அன்பு பாராட்டியது இவன் எக்காலமும்
    மறக்கக்கூடாதபடி அவன் இருதயத்தில்
    அழுந்திக்கொண்டது..................மீட்கப்பட்ட பரிசுத்தக்
    கூட்டத்தாரோடு இப்பொழுது மோக்ஷானந்த பரவசம்
    அனுபவிக்கும் மகரிஷி H. A. கிருஷ்ணபிள்ளை அவர்களே
    மேலே விவரித்த வித்வான். அவர்களால் குணப்பட்டு கிறிஸ்து
    மார்க்கத்தில் நிலைபெற்றவர்களில் ஒருவர் மேற்காட்டிய
    சைவ வாலிபனான இதை யெழுதும் வக்கீல்
    A. S. அப்பாசாமிப்பிள்ளை.1

    யாருக்கு என்ன நன்மையைச் செய்யலாம் என்னும்
    சிந்தையையே இவர் சதா அணிந்துகொண்டிருப்பார்.

    4. விருந்துபசரித்தல். தமது வீட்டுக்கு வருகின்ற
    விருந்தினரை ஏற்று உபசரித்தல் நமது வித்வானுக்கும்
    அவரது சிறந்த மனைவிக்கும் பிரீதியான விஷயம்.
    பாளையங்கோட்டை மார்க்கமாகச் செல்லும் பிரயாணிகளுக்கும்
    வித்வானைக் காணவரும் சிநேகிதர்களுக்கும் இவர் வீடு ஒர்
    சத்திரம்போல் விளங்கினது. விருந்தில்லா நாள் காண்பது
    அரிதாம்.

        5. சுத்தம். நமது வித்வான் எப்பொழுதும் சுத்தமாகவே
    இருப்பார். இவ்விஷயத்தில் அவருடைய மனைவியாரின்
    முயற்சியும் அதிகம். அவருடைய வீடு எப்பொழுதும்
    சத்தமாகவே இருக்கும். வீட்டிலுள்ள சாமான்கள்
    தட்டுமுட்டுகள் யாவும் எந்நேரமும் சுத்தமாயும் பளபளப்பாயும்
    இருக்கும். அனுதினமும் காலையிலெழுந்து கவிபாடினதும்
    தாமிரபரணி யாற்றுக்குச்சென்று ஸ்நானம்பண்ணிவருவார்.
    எப்போதும் தூய வெள்ளை வஸ்திரம் உடுத்திக்கொள்ளுவதும்
    தனது நடையுடை பாவனைகளில் எப்பொழுதும்
    சுத்தமாயிருப்பதும் இவரது இயற்கைக் குணமாகும்.

    மேலும் நமது வித்வானுடைய வழக்கபழக்கங்களும்
    வெகு சுத்தமானவை. சுருட்டு முதலிய மயக்க வஸ்துக்களை
    இவர் ஒருபோதும் உபயோகிக்கவே இல்லை. அன்றியும்
    நமது வித்வான் தமது முந்திய வழக்கத்தின்படியே தம்
    மரணபரியந்தமும் மாம்சம் புசியாதிருந்தார்.

    6. வாய்மை. வாய்மை சத்தியம் உண்மை இவை ஒரு
    பொருளன. வாய்மை என்பது மனம் வாக்குக் காயம் என்னும்
    தரிகரண ஒருமைப்பாடு,


    1 மஹரிஷி கிருஷ்ணபிள்ளையவர்களது சிறந்த கிறிஸ்தவ
    குணசீலத்தினாலும், போதனையினாலும் சைவ மதத்தைவிட்டு
    கிறிஸ்துவைத் தன் குருபரனாக்கொண்ட அப்பாசாமி
    பிள்ளையவர்கள் தென்னிந்திய கிறிஸ்தவர்களில் அதி
    கிரேஷ்டமானவர். பாளையங்கோட்டையில் இவர்கள் பிரபல
    வக்கீலாக இருந்து, கிறிஸ்தவ கைங்கரியத்தில் மிகவும்
    ஈடுபட்டிருந்தார். கிறிஸ்தவ சபைக்கும் ஜன சமூகத்துக்கும்
    உபகாரமான பலவித ஊழியங்களை இயற்றினார். இவரது
    செல்வாக்கையும் ஜனோ பகாரச் செயல்களையும் பாராட்டித்
    துரைத்தனத்தார் இவருக்கு திவான்பகதூர் என்னும் மிக
    உயர்ந்த பட்டத்தைக் கொடுத்தனர். வித்வான்
    கிருஷ்ணபிள்ளை பிறந்த நூறாம் வருஷமாகிய இந்த வருஷம்
    (1927) இவர்கள் மண்ணுலகை விட்டு தாம் ஆசித்திருந்த
    விண்ணுலகையடைந்தனர். இவரது பிள்ளைகளும்
    குடும்பத்தாரும் நமது தேசத்தில் சபையிலும் சர்க்காரிடத்திலும்
    அதி உன்னதமான உத்தியோகங்களை வகித்து வருகின்றனர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:18:48(இந்திய நேரம்)