Primary tabs
-
தைலத்தின் நல்ல வாசனை எங்கும் பரிமளித்தது. இவரிடத்தில்
காணப்பட்ட நன் நடக்கையின் விஸ்தாரமோ அவரை அறிந்த
யாவரும் வியிந்து துதிக்கத் தக்கவை.ஸ்ரீ கிறிஸ்து பெருமானுடைய திருவடி மலர்களிடத்து
வித்வான் கிருஷ்ணபிள்ளை கொண்டிருந்த பக்தியின் அளவை
அவர் பாடிய பாசுரங்களினின்றே அறியலாம்.
இயசேுநாதஸ்வாமியினுடைய அளவிட முடியாத
திருக்குணங்களையும் அவர் செய்துள்ள மகத்தான
இரக்ஷணியத்தின் மகிமையையும் பாடிப் பாடித் துதித்த
ஸ்தோத்திரம்பண்ணி, மெய்யான அன்பினால் சிந்தை தன்
வசமொழிந்து பரவசமாக, ஆவியானது அனல்கொண்டெழ,
உள்ளநெகிழ்ச்சியினால் எலும்புகள் உருக, பெருமகிழ்ச்சியினால்
ஆநந்தக்கண்ணீர் சொரிய, இவ்வாறு நிலைபெற்ற பகவத்
பக்தியில்தான் லயித்துவிடுவதே இவரது மனதில் பெரிய
அபிலாஷையாக இருந்ததாக இவர் பாடலால் அறியலாம்.
அன்புமயமே கருணை ஆனந்த வாரியே
அருள்மொழி மழைக் கொண்டலே
ஆருயிர்க் குயிரான அமிர்சஞ் சீவியே
அடியரித யாம்பரத்தில்
இன்புற உதித்திலகு மெய்ஞ்ஞான பானுவே
ஏத்தரும் சுகுண நிதியே
இதரசம யாதீத நிலையமே வானிழிந்
திம்பர்வரு ஜீவ நதியே
மன்பதை புரக்கநடு நின்றோங்கு ரக்ஷணிய
மாமேரு வேயென்று நின்
வண்புகழ் வழுத்திமெய் அன்பினொடு சிந்தைபர
வசமாகி ஆவி அனல்கொண்டு
என்புருகி ஆனந்த பாஷ்பஞ் சொரிந்துநின்று
ஏத்தவருள் செய்வ தென்றோ
ஏகநாயகசருவ லோகநா யககிறிஸ்து
இயேசு நாயக் ஸ்வாமியே.
ன்று இரக்ஷணிய மனோகரத்தில் பாடியிருக்கின்றார். மேலும்
இரக்ஷணிய யாத்திரிகத்துள் ஒரிடத்தில் பிசாசின் கையினின்று
என்னை மீட்டு இரட்சித்த எம்பெருமானுடைய பாதங்களை
யல்லாது வேறெதையும் மரணம் வரினுங்கூட என் வாய்
மறந்தும் துதியாது, எனது சிரசு மறந்தும் வணங்காது என்று
தமது பக்தி வலிமையை அனுபவார்த்தமாகக் கூறுகின்றார்.1நாயி னுங்கடைய பாவி யேனையெரி நரக வாயிலுந டுக்குறும்
பேய்கொ டுங்கையிலு நின்றி ழுத்தழிவில் பேற ளித்தபெரு
மானருள்
தாயி னுஞ்சதம டங்கு நேயமுறு தற்ப ரன்சரணம் அன்றியென்
வாய்ம றந்துதுதி யாது சென்னியும்வ ணங்கி டாதிறுதி
வரினுமே.
1 பொழிப்புரை: - நாயினும் சீர்கெட்ட பாவியாகிய
என்னை எரிகின்ற அக்னியையுடைய நரக வாசல்கூட கண்டு
நடுங்கத்தக்க பேயினுடைய கொடிய கையிலிருந்து (வலிய)
இழுத்து மீட்டு இரக்ஷித்து அழிவில்லாத முத்திப்பேற்றைக்
கொடுத்தருளிய கிறிஸ்து பெருமானுடைய அன்பானது
பெற்றதாயின்