தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Library

  •  
    1 தொக்கபாவமன் னிப்புநித்திய ஜீவநன்மையும் சுகிர்தமும்
      மிக்கபேரின்ப வீடும்நங்கிறிஸ் தியேசு வைவிசு வாசிக்கில்
      கைக்குள் வந்ததிங் கையமொன்றிலை கண்டுகேட்டுணர்ந்
      துலகுளீர் தக்கவாறுநன் றாய்மின்ரக்ஷண்ய சமயநிர்ணயம் தானிதே.

    பன்னிரண்டு சிறு சூத்திரங்களேகொண்ட சிவஞானபோதம்
    என்னும் சைவசித்தாந்த நூலானது சைவ மதத்தின் சகல
    அம்சங்களையும் அடக்கிக்கொண்டிருத்தல்போல், பத்து
    விருத்தங்களால் ஆக்கப்பட்ட இத் தேவாரப்பதிகமானது
    இரக்ஷணிய சமயமாகிய சிறிஸ்து மதத்தின் சகல
    அம்சங்களையும் தன்னுள் அடக்கிக்கொண்டிருப்பது நாம்
    நோக்கத் தக்க விஷயம்.

    2. இரக்ஷணிய யாத்திரிகம்.

    இம்மகாப் பெருங்காப்பியத்தின் சிறப்பை யாமோ
    எடுத்துக்கூறும் திறம் உடையோம். பக்தரத்தினமாகிய
    கிருஷ்ணபிள்ளை தம் அந்திய காலத்தில் பதினாலு
    வருஷங்களாகப் பாடிய ஓர் அரிய காவியம். ஜான் பனியன்
    என்னும் ஆங்கில ஆசிரியர் தான் சிறைவாசஞ்செய்த
    காலத்தில் இயற்றிய பரதேசியின் மோட்சபிரயாணம்
    என்னும் முதனூலை ஆதாரமாகக்கொண்டு எழுதப்பட்ட
    வழிநூலாகும் இது. இந்நூலின் விசேஷ லக்ஷணங்களைப்பற்றி
    நூலாசிரியர் எழுதியுள்ள முகவுரையிலும் கனம் உவாக்கர்
    ஐயர் எழுதிய ஆங்கில பாயிரத்துள்ளும்
    கூறியிருக்கின்றமையால் அவற்றை யாம் கூறாது விடுத்தோம்.

    இந்நூலின் மகிமையை வியந்துகொள்ளாதவர் இல்லை.
    தமிழ் பாஷையிலுள்ள மிகவுயர்ந்த, நூல்களோடு ஒன்றாய்
    வைத்தெண்ணத் தக்க பெருஞ்சிறப்பை உடையது இந்நூல்.
    மிகுதியாய் கம்பராமாயணத்தின் நடையையும் அதன்
    போங்கையும் அனுசரித்தே அமைக்கப்பட்டது.

    'தன்னிகரில்லாத் தலைவனை யுடைத்தாய்' என்பதாகிய
    புனிதமான அங்கங்களை யெல்லாம் தழுவி இயற்றப்பட்ட
    இப்பெருங்காப்பியத்தின் இலக்கண வலிமையானது சிந்தாமணி
    சிலப்பதிகாரம் முதலிய பஞ்ச காவியங்களை யொக்கும்.
    கற்றோர் இருதயம் களிக்கச்செய்யும் தன்மையில் இது கம்ப
    ராமாயணத்துக்குச் சமமாகும். இக்காவியத்துள் ஆங்காங்கு
    காணப்படும் பக்திக்குரிய காசுரங்கள் உருகாதாருடைய
    நெஞ்சையும் உருக்கிவிடும் தன்மையில் இதை
    மாணிக்கவாசகரியற்றிய திருவாசகத்துக்குச் சமம் என்னலாம்.
    பாவத்தின் கொடுமையையும் பாவ


        1 பொழிப்புரை: - உலகத்தீரே, நீங்கள் எமது கிறிஸ்து
    ஸ்வாமியை விசுவாகிப்பீர்களென்றால், உங்களுக்குப்
    பாவமன்னிப்பும், நித்திய ஜீவனாகிய நலமும், இம்மையில்
    சுகிர்தமான ஜீவியமும், மறுமையில் மிகுந்த பேரின்பத்தைத்
    தரத்தக்க பரமபத வீடும் உமது கைக்குள் நிச்சயமாகவே
    வந்துவிடும். இதற்குச் சந்தேகமே இலலை, இதை நீங்கள்
    கண்டு, தெரிந்தோரிடத்தில் கேட்டு, உங்கள் இருதயங்களில்
    உணர்ந்து, தகுந்தபிரகாரமாக நன்றாய் ஆராய்ச்சி செய்யுங்கள்,
    இரக்ஷணிய சமய நிர்ணயம் இது தான்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:20:16(இந்திய நேரம்)