Primary tabs
-
உணர்ச்சியின் தன்மையையும் பாவ பரிகரணத்தின் ஆனந்தத்தையும்
உணர்த்தும் தன்மையில் இந்நூல் திருமங்கையாழ்வார் பாடிய பெரிய
திருமொழிக்குச் சமம் என்னலாம். படிப்போர் கேட்போருடைய
மனமானது இளகும்படி பரமான்மாவுக்கும் ஜீவான்மாவுக்கும்
உள்ள சம்பந்தா சம்பந்தங்களை அகப்பொருளிலக்கணத்துக்கு
முரண்படாமல் எடுத்தியம்பலில் இந்நூலானது திருவாதவூரார்
இயற்றிய திருக்கோவையாரையும் ஆண்டாள் இயற்றிய நாச்சியார்
திருமொழியையும் ஒக்கும். இதனுள் அடங்கிய தேவாரங்களோ
வேறெவ்வித அபிலாஷையுமின்றி பகவானுடைய திருப்பாதங்களைப்
பாடவேண்டும் என்கிற அவாவினால் பாடப்பட்டமையால் வாகீசர்
என்னும் மறுநாமம்கொண்ட திருநாவுக்கரசர் இயற்றிய
தேவாரங்களுக்குச் சமமாகும். இத்துணை சிறப்புவாய்ந்த இரக்ஷணிய
யாத்திரிகத்தின் மகிமையை இன்னும் விளக்கவேண்டுமோ.இந்நூலினது சிறப்புப்பாயிரத்துள் இந்நூலை இயற்றுதற்குள்ள
காரணத்தை வித்வானே கூறியிருக்கின்றார். அது வருமாறு
1என்னனைய பாவியரிந் நிலவுலகில் யாண்டுமிலர் எனினும்
நாயேன்
தன்னையொரு பொருளாகத் தடுத்தாண்ட கிறிஸ்தியேசு
சாமிசெய்ய
பொன்னனைய திருவடிக்குச் செந்தமிழ்மாலிகையொன்று
புனைவான் எண்ணி
துன்னுநவ ரக்ஷணிப யாத்திரிக மலரெடுத்துத்தொடுக்க
லுற்றேன்.
இக்காவியத்துள் ஐந்து பருவங்கள் உள. ஒவ்வொரு பருவமும் பல படலங்களாக பகுக்கப்பட்டிருக்கின்றது. பெரிய புராணத்துள் இடைக்கிடையே தேவாரப்பதிகங்கள் பொதிந்திருக்கின்றதுபோல் இதனுள்ளும் பல அழகிய தேவாரப்பதிகங்கள் அமைந்துகிடக்கின்றன. இக் காவியம் சுமார் 4000
கவிகளால் ஆகியது.இத்துணை சிறப்பு வாய்ந்த இந்நூலின் முதற் பதிப்பில்
தோன்றிய ஆயிரம் பிரதிகளும் சில வருஷங்களில்
செலவாகிவிட்டன. வித்வானுடைய மரணத்துக்குப் பின்
அவரது மனவிருப்பத்துக்கிணங்க இந்நூலை இரண்டாம்தரம்
பதிப்பிக்கவேண்டும் என்னும் ஊக்கம் தமிழ் நாட்டில் ஒரு
சிலருக்கே யிருந்தது. ஆயினும் கடந்த பத்து வருஷங்களாக
தமிழ்க் கிறிஸ்தவர்களும் பிறரும் இந்நூலில் மிகப் பெரிய
விருப்பத்தைக் காட்டினர். ஆனால் பிரதிகளோ கிடைக்கவில்லை.
சிலர் இதற்கு 6 ரூபாய் வரையிலும் விலை கொடுத்தும் காப்பிகள்
கிடைக்கவில்லை. இந்நூலைத் திரும்பவும் பதிப்பிக்கும்படி முயற்சி
நடந்தன. மதுரை கனம் J. S. மாசிலாமணி ஐயர், கனம் H. A.
பாப்புலி ஐயர், கனம் K. T. பால் ஆகிய இவர்கள் இதற்காகப்
பெரும் முயற்சிகளைச் செய்தாலும், புஸ்தகத்தின் சுதந்தர உரிமை
கிருஷ்ண பிள்ளையின் குடும்பத்தாரிடம் இருந்தமையாலும், குடும்ப
விஷயங்கள்
1பொழிப்புரை. - எனக்குச் சமானமான பாவியர்
இந்நிலவுலகத்தில் எக்காலத்தும் எங்கும் இருந்ததில்லை. நாய்க்குச்
சமானமான என்னையுங்கூட ஒரு பொருளாக மதித்து பிரபஞ்ச
மார்க்கத்தில் செல்லாமல் என்னைத் தடுத்து, தமது திருக்கருணையால்
என்னை ஆட்கொண்ட ஸ்ரீ கிறிஸ்தியேசு சுவாமியின் சிவந்த
பொன்போலும் அழகிய திருவடிகளுக்கு செந்தமிழால் பூமாலை
(பாமாலை) ஒன்று சாத்தும்படியாக நினைத்து, நெருங்கிய புதிய
ரக்ஷணிய யாத்திரிகம் என்னும் திவ்ய பூக்களை (பாக்களை) எடுத்து
அம்மாலையைத் தொடுக்க ஆரம்பித்தேன்.