Primary tabs
-
அக்காலத்தில் ஒழுங்கு படுத்தப் படாமலிருந்தமையாலும்,
புஸ்தகத்தை அச்சிடுவது அசாத்தியமாகவே இருந்தது. ஆகிலும்
மேற்கூறிய மூவரின் விடாமுயற்சியாலும் ஜஸ்டிஸ் தேவதாஸ்
பிள்ளை அவர்களின் உதவியினாலும் குடும்பத்தார் தமிழ்
உலகத்துக்குச் செய்ய விரும்பிய பேருபகாரத்தின் பயனாகவும்,
ரக்ஷணியயாத்திரிகம் என்னும் இந்நூலானது திரும்பவும் அச்சுவாகனம்
ஏறி, தமிழ் நாட்டின்கண் உலவ ஆரம்பித்திருக்கின்றது. இதன்
அழகை யாவரும் கண்ணுற்று, மனமார ஆனந்தானுபவமடைந்து
வாழ்வாராக.இதன் பதிப்புரிமையை தமிழ் நலத்துக்கென்றும், கிறிஸ்தவ
பக்தி விருத்திக்கென்றும், விட்டுக் கொடுத்த, குடும்பத்தினருக்கும்
விசேஷமாய் குடும்ப உரிமையின் பரிபாலகராகிய ஸ்ரீமான்
கிருஷ்ணையா அவர்களுக்கும், இக்காவியத்தைத் திரும்பவும்
ஒருமுறை அச்சுவாகனமேற்ற அன்புடன் ஒப்புக்கொண்ட சென்னை
கிறிஸ்தவ கல்விச் சங்கத்தாருக்கும் தமிழ்க்கிறிஸ்தவர்கள் எந்நாளும்
கடமைப்பட்டுள்ளார்.3. இரக்ஷிணிய மனோகாம்.
இரக்ஷணிய யாத்திரிகத்துள் அடங்கிய தேவாரங்கள்
பக்திக்குரிய பாசுரங்கள் முதலியவைகளும் பாலிய பிரார்த்தனை,
குமாரானுபூதி, சந்நிதி முறை முதலிய பாடல்களும் அடங்கிய நூல்.
இதில் முதலாவதாகவுள்ள பால்ய பிரார்த்தனை யென்பது ஐந்து
வயதுள்ள சிறு குழந்தைகள் உள்ளத்திலும் பதியத்தக்க
இயற்சொற்களால் தெளிவான பொருளுள்ளதாகச் சிறு கவிகளால்
இயற்றப்பட்ட 45 கவிகள். சந்நிதி முறையென்பது தாயுமானவர்
பாடல்களைப்போன்றவை. 'இவைகளில் தேவஸ்துதி, ஸ்தோத்திரம்,
ஜெபம், மன்றாட்டு, பாவ அறிக்கை, மெய் மனஸ்தாபம்,
வேண்டுகோள், ஒப்படை இத்யாதி விஷயங்களைப்பற்றியே கூறுவது.
சற்று நீளமான விருத்தங்களாயிருப்பினும், சங்கதியின் தொடர்பை
கவனித்துப் படிக்கிற பக்ஷத்தில் வெகு சுலபமாய் மனப்பாடமாகும்.
கருத்தோடு கவனமாய் வைகறைப்பொழுதில் இயன்றவளவில்
கூடிய இசையோடு படிக்க முயன்றுவருவோருக்குத் தேவானுக்
கிரகத்தால் மனசு ஒருமுகப்பட்டு கரைந்து உருகும், பெருமூச்செழும்,
கண்ணீர் சொரியும், நாவு குழறும், உள்ளத்தில் ஆவியின் அனல்
மூளும், பரம தயாளுவாகிய ஸ்ரீ கிறிஸ்துவின் அன்பு உள்ளத்தில்
வெளிப்படும்' என்று வித்வான் தாமே இதற்குரிய முகவுரையில்
கூறியிருக்கின்றார். இந்நூலின் இதர பாகங்கள் பெரும்பாலும்
இரக்ஷணிய யாத்திரிகத்தினின்று திரட்டப்பட்டவை............................பரமான்வாவுக்கும் ஜீவான்மாவுக்கும் உள்ள சம்பந்தா
சம்பந்தங்களை உணர்த்தும் இருபத்தொன்பது கவிகளைப்
பொறுக்கி எடுத்து அவற்றுக்கு ஆன்மப்பிரலாபம் என்று
பெயரிட்டு அதற்கு மிகச் சிறந்த பொழிப்புரையும் எழுதியிருக்கிறார்.
அகப்பொருளிலக்கணத்தை அனுசரித்து பாடப்பட்ட இக்கவிகள்
கற்றோர் மனதைக் கவரத்தக்கன. இது மாணிக்கவாசகர் இயற்றிய
திருக்கோவையாரைப்போலவும், தாயுமானவர் பாடிய பைங்கிளிக்
கண்ணியைப்போலவும் ஸ்திரீ புருக்ஷருடைய பரஸ்பர சிநேகத்தின்
வெவ்வேறு தத்வங்களை உவமையாகக் கொண்டு பரமான்மாவுக்கும்
ஜீவான்மாவுக்குமுள்ள சம்பந்தா சம்பந்தங்களைக் கூறுகின்றது.