தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


“ஆசிய மண்ணில் வீசிய ஒளியார் .... கூறிடவே துணிந்தேனே”.

(ப: 3 பாடல் : 10)

என்று காவிய நோக்கத்தையும் வெளிப்படுத்துகின்றார், “வரும்புகழ் எல்லாம்
வானவன் அல்லா வலியனுக்கே உரித்தாகும்” என்பதே நூல் உரைக்கும்
பொருளாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் ஆற்றலை அற்புதமான கவிதைகளாக்கித்
தந்துள்ளார் துரை. மாலிறையன்.

“அல்லாவே அருளில் மிக்கான் .... அரும்புவி இயங்கும் நன்றே”

(ப: 347 பாடல் :58) என்றும்

“எளியவன் அல்லா ஏற்றம் ஈபவன் அல்லா .... அல்லா தானே”

(ப: 348 பாடல் :60)

என்றும் அவர் பாடியுள்ள பாடல்களில் திருக்குர்ஆனில் இறைவனின்
இயல்புகளாகக் கூறப்படும் கருத்துக்களின் திரண்ட சாரமாகத் திகழ்வது
பாராட்டிற்குரியது.

திருமறையையும் திருநபியையும், தேர்ந்து தெளிந்து, செறிவாகவும்,
நிறைவாகவும், இனிமையாகவும், எளிமையாகவும், நுட்பமாகவும், திட்பமாகவும்
இந்நூலைத் துரை, மாலிறையன் படைத்துள்ளார் என்பது நூற்றுக்கு நூறு உண்மை.
வெறும் புகழ்ச்சியில்லை.

“இறையைப் போற்றல் ... முசுலிம் முனைந்து செயல்வேண்டும்”

(ப: 407 பாடல் :43)

என்று இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளையும் ஒரே பாடலில் அழகாகத்
தொகுத்துத் தந்துள்ளார்.

இவை ஒவ்வொன்றுக்கும் தனிக்தனியே பொருத்தமான விளக்கங்களையும்
எவருக்கும் புரியும் வகையில் மிக எளிமையாகவும் விளக்கியுள்ளார். எது சக்காத்து
என்பதற்கு.

“இருப்போர் எல்லாம் ... பேணும் அரிய சக்காத்து”

(ப: 354 பாடல் :98)

என்று பாடுவது அருமையிலும் அருமை.

முஸ்லிம்களின் பண்பாடுகளையும், பழக்க வழக்கங்களையும் ஓர்ந்து
உணர்ந்தே, தேர்ந்து கற்றே துரை.மாலிறையன் இக்காப்பியத்தை இயற்றியுள்ளார்.
இறந்துவிட்ட ஒருவரை முஸ்லிம்கள் எப்படி நல்லடக்கம் செய்கிறார்கள் என்பதை,

“நீரால் கழுவிக் குளிப்பாட்டி ... சுமந்து நடந்தார்கள்”

(ப: 368 பாடல் :79)

என்று பாடுவதே அவர்தம் புலமைக்குச் சான்று எனலாம்.

“பொருளிலார் தமைவை யத்தோர் ... ஒளியே வேண்டும்”

(ப: 57 பாடல் : 28)

புதுப்பிக்கபட்ட நாள் : 18-09-2017 19:54:12(இந்திய நேரம்)