தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


பாராட்டியதோடு மதிப்புரையும் அளித்துச் சிறப்பித்த காரைக்கால் பேராசிரியர்கள்
தமிழ்நெறிச் சான்றோர்கள் திரு.மு.சாயபு மரைக்காயர், திருமதி. சா. நசிமாபானு
ஆகியோர்களுக்கும்,

காவியத்தைக் கண்ணுற்ற அளவில் மகிழ்ந்து முதற்கடமையாக முனைந்து
வாழ்த்துரை எழுதித்தந்த மௌவ்லவி அல்ஹாஜ் பி, முஹம்மது சயீது பாகவி
அவர்களுக்கும்,

காவியத்தைப் படித்துத் தேவையான குறிப்புகள் தந்துதவிய மேனிலைப்
பள்ளி முன்னாள் முதல்வர் திரு. ஆரிபு மியான் அவர்கட்கும்,

நெஞ்சமெல்லாம் அல்லாவின் அருட்புகழே நிறைந்திருக்கும்
எளியவரிடத்திலும், பெரும்பணிவு காட்டுகிற தியாகி சமயநல்லிணக்க அன்பர்
திரு. அப்துல் மஜீது அவர்கட்கும்,

சிறந்த எழுத்தாளரும், மனிதநேயச் செம்மலுமான முன்னாள் சட்டத்துறைச்
செயலர் திரு. வயி. நாராயணசாமி அவர்களுக்கும்,

தமிழ்ப்பேரறிஞரும், புதுவைப் பல்கலைக்கழகத் தேர்வுத்
தணிக்கையாளருமான இயேசு அன்பர் பேராசிரியர் திரு. ஆரோக்கியநாதன்
அளிக்கும் ஊக்கம் அளவிடற்கரியது; அன்னாருக்கும்,

அல்லாவின்மீது பேரன்புகொண்ட நன்னெறியாளர் இறைவனின்
பொன்னடிபோற்றும் புரவலர் - மனிதநேயம் மிக்க அறநெறிச்செம்மல் டாக்டர்.
எம். இலியாஸ் - (தலைவர், தமிழ்ப்பண்பாட்டுக் குழுமம் - பாங்காங் -
தாய்லாந்து) அவர்கட்கும்,

அல்லாவின் பேரன்பர் அருமை நண்பர் மதிப்புமிக்க சர்புதீன் பி.டி.ஓ.
அவர்கட்கும், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. சிவா, திரு. அனிபால் கென்னடி
ஆகியோருக்கும்,

இறைநெறி போற்றும் இதயங்களில் வாழும் இனிய அன்பர், மனித நேயம்
மிக்க சுல்தான்பேட்டை இசுலாமிய நன்னெறியாளர் பெருமைமிகு டி.கே.ஐ.
ஜியாவுத்தீன் புரவலர் அவர்களுக்கும்,

பண்பாடும், பாசமும் நிறைந்த நண்பர் ஆர். ஜலீல் (சுல்தான்பேட்டை)
அவர்களுக்கும்,

அல்லாவின் அருள்பெற்ற வள்ளல் எம்.இ.ஜமாலுத்தீன்; தொழிலதிபர்
திருவண்ணாமலை, புதுவைத் தொழிலதிபர் திரு. பாஷா ஆகியோர்க்கும்,
பல்வேறு வகையில் உதவி புரிந்து வரும் அன்பும் பாசமும் நிறைந்த

புதுப்பிக்கபட்ட நாள் : 18-09-2017 19:35:59(இந்திய நேரம்)