Primary tabs
காணிக்கை
சூரிய
விசயகுமாரி பி.லிட்,. பி.எட்
தமிழாசிரியை
“சூரிய விசயகுமாரி அறக்கட்டளை நிறுவனர்”
புதுவை - 13.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்
ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பன நம் தமிழர் கொள்கை.
உலகில்
மனித நேயத்தை வளர்த்து அதன்வழி இறைவனை
அடைவதற்குப்
பல்வேறு நெறிகள் தோன்றலாயின. அவற்றுள் ஒன்றாகவும்,
உயரிய
கோட்பாடுகளைத் தன்னகத்தே கொண்டதாகவும்
அமைந்த ஒரு சிறந்த நெறியே
இசுலாமிய நெறியாகும். திருக்குர்ஆன் உரையை இறைவன்,
நபிகள் நாயகப்
பெருமானாரின் மூலமாக உலகிற்கு அனுப்பினான்.
பெருமானார்தாம் வாழ்ந்து
காட்டிய நெறியின் மூலம் திருக்குர் ஆனின் பேரொளியை
இறைவனின் துணை
கொண்டு உலகில் பரவச் செய்தார்.
இக்காவியத்தை உலக அமைதி நோக்கியே என் கணவரை
எழுதத்
தூண்டினேன். ஆகவே
சமய நல்லிணக்கத்தோடு, மனித நேயத்தோடு,
அன்பு காட்டி வாழுகிற அனைத்து
உயர்ந்த உள்ளங்களுக்கும் இக்காவியத்தைக்
காணிக்கை ஆக்கி மகிழ்கிறோம்.
தமிழிலக்கிய உலகம் இதனை ஏற்று வரவேற்கும் என நம்புகிறோம்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
- சூரிய விசயகுமாரி