இசை
உளர்
-
இசை நரம்புகளைத்
தடவுகின்ற
இசைப்பகை
-
பத்திரன்
பகைவனாகிய ஏமநாதன்
இசைப்
பாணன்
-
இசைவல்ல
பாணன் (பாண பத்திரன்)
இடக்கை
-
இடக்கையால்
கொட்டும் ஒரு தோற்கருவி
இடாகினி
-
இடாகினிப்
பேய்கள்
இடைக்காடன்
-
சங்கப்
புலவருள் ஒருவர்
இடைதல்
-
வருந்துதல்,
மனந்தளர்தல்
இடையற
-
வெற்றிடம்
இன்றி, முழுதும்
இணைமுகப்
பறை
-
இரண்டு
முகங்களையுடைய ஒரு வகைப் பறை
இதைப்
புனம்
-
புதுக்
கொல்லை
இமையவர்
-
வானவர்
(இமையாத நாட்டம் பெற்றவர்)
இரட்ட
-
ஒலிக்க,
உச்சரிக்க (பாடும் பண் தவறி வேறு பண் ஒலித்தல்)
இரண்டு
அறி பெயர்
-
படைப்பு,
காப்பு என்ற இரண்டும் அறிந்த நான்முகன், திருமால்
இரவி
தெறு மணி
-
சாதுரங்கம்
என்னும் மாணிக்கம்
இரு
சுடர்
-
சந்திர
சூரியர்
இருட்பகை
மண்டிலம்
-
சூரிய
மண்டிலம்
இருதிணை
-
உயர்திணை,
அஃறிணை
இரு
நிலம்
-
இவ்வுலகு,
அவ்வுலகு
இரு
மனம்
-
இரு வகைப்பட்ட
மனம் (ஒரு நெறியில் நில்லாத உள்ளம்)
இரு
முனிவர்
-
இரண்டு
முனிவர் (பதஞ்சலி, வியாக்கிரபாதர்)
இரு
வடிவு
-
சத்தியும்,
சிவமும்
இருவி
-
அரிந்த
தினையின் தாள்
இரு
வினை
-
பிறத்தற்குக்
காரணமாகிய பசுவினை, பாசவினை என்னும் இரண்டு வினைகள்; நல்வினை, தீவினை
இல்
உறை கல்
-
அம்மிக்
கல்
இலை
நெடு வேல்
-
தகட்டு
வடிவமான முனையுள்ள நீண்ட வேல்
இவறிய
-
எழுந்த,
ஆசைப்பட்ட
இழை
எனச் செறித்து
-
ஆபரணமாகப்
பூண்டு
இளங்
கா
-
பசிய
இளமரச் சோலை
இறடிஅம்
சேவல்
-
தினைக்
காவல்
இறுத்தல்
-
விடை
சொல்லுதல்; பதிலுரை சொல்லுதல்
இறையோன்
-
கடவுள்
(எங்கும் நிறைந்தவன்)
இன்னல்
-
மனக்
கோட்டம், துன்பம்
இனன்
நூல்
-
சூரியன்
செய்த குதிரை இலக்கண நூல்