எக்கர்
-
இடுமணல்,
மணல் மேடு
எட்டு
எட்டு
-
அறுபத்து
நான்கு, அறுபத்து நான்கு
திருவிளையாடல்
எடுத்துப்
பரப்பிய
-
விரித்து
உரைத்த
எண்
தோட்
செல்வி
-
எட்டுத்
தோள்களையுடைய இறைவி
(காளியம்மை)
எண்
வழி
தடைந்து
-
எண்ணாமல்
தடுத்து
எயிற்றியர்
-
வேட்டுவ
மகளிர்
எயிறு
-
பல்,
பன்றிக் கொம்பு
எயினர்
பாவை
-
வேடர்
குலப் பெண் (வள்ளி நாச்சியார்)
எரியகல்
-
எரியை
உடைய அகல்; அகலில் எரிகின்ற
தீப்போல் சிவபெருமான் கையகத்துள்ள தீ
எழுகதிர்
-
எழுகின்ற
கதிரவன், உதய சூரியன், மிக்க ஒளி
எழுதுமின்
-
கோலம்
இடுமின்
எழுமலை
பொடித்தவர்
-
கிரௌஞ்சம்
என்னும் மலையைப் பிளந்த
முருகக் கடவுள்
எறிந்து
-
கலைத்து,
விழுந்து, வெட்டி, அழித்து
எறிபுனம்
-
தினையறுத்த
புனம்