கஞ்ச
நாதம்
- வெண்கலத்தால்
செய்த தாளக் கருவியின் ஒலி
கட்புலம்கொண்ட
- கண்ணாரக்
கண்டு மகிழ்ந்த
கட ஒலி
- யானையின்
ஒலி; காட்டில் கேட்கப் பெறும் ஒலி
கடக்
குழி
- மதம்
உண்டாகும் குழிந்த இடம்
கடந்து
- வென்று,
அப்பாற் பட்டு
கடம்
- காடு;
குடம்; மதநீர்
கடல்
தெய்வம்
- கடலாகிய
தெய்வம்
கடன்
- காரணம்,
வினைப் போகம்
கடன்
அறும்
யாக்கை
- வினைப்
போகத்தைத் துய்ப்பதற்குப் புகுந்த
உயிர் நீங்கிய யாக்கை; உயிர் நீத்த உடல்;
வினைப் பயன் அற்ற உடல்
கடி
- காவல்,
மணம், விலக்குதல்
கடிதல்
- நீக்குதல்,
போக்குதல், ஓட்டுதல்
கடிப்பு
- முழவின்
வார்; குறுந் தடி; சிறு பறையில்
கட்டியுள்ள சதங்கைகள்; நரம்புக் கருவியில்
ஒலியமைக்கும் நரம்பு
கடுக்களம்
- காள
கண்டம்; நஞ்சணிந்த மிடறு
கடுங்
குலை
- செங்குத்தான
கரை
கடுஞ்
சுரம்
தந்த
- கொடிய
பாலை நிலத்தில் உண்டான
கடுமான்
- சிங்கம்;
விரைந்து செல்லும் குதிரை
கடைக்கொள்
நாள்
- இறுதி
நாள்
கண்டி
- கண்டமுடையாள்,
கழுத்தையுடையவள்
கண்ணி
- தலையில்
சூடும் மாலை
கண்ணிய
- கருதிய,
பொருந்திய
கண்ணிலர்
- ஞானக்
கண் இல்லாதவர்
கண்ணிலி
- கண்ணோட்டம்
இல்லாதவன்
கண் படுத்தல்
- உறங்குதல்,
நித்திரை செய்தல்
கண் பனித்து
- கண்ணில்
நீர் துளித்து
கதிர்
- ஒளி,
சூரியன், கிரணம்
கதிர்
உடல்
- சூரிய
மண்டலம்
கமஞ்
சூல் மழை
- நிறைந்த
சூலுடைய மேகம்
கயற்கொடி
- மீனக்
கொடி (பாண்டியருக்கு உரியது)
கரடிகை
- ஒருவகை
வாத்தியம்
கரணம்
- மனம்,
புத்தி, சித்தம், அகங்காரம், என்னும்
உட்கரணம் நான்கு
கராதி
- (கர+ஆதி)
- கரன் முதலியோர்
கரியோர்
- சான்றாக
உள்ளவர்
கரியோன்
- திருமால்,
கண்ணன்
கரியோன்
திருவுறை
- கூடல்
அழகர் கோயில்
கரு
- பசுங்காய்;
சினை; கர்ப்பம்
கரு இருந்து
- கர்ப்பங்
கொண்டு, சூல் கொண்டு
கருங்
கயிறு
- பெருங்
கயிறு; வலிய கயிறு
கருங்
கழி
- பெரிய
உப்பங் கழி
கருங்
காற்
கவண்
- வலிய
கால் அமைந்த கவண்
கருங்
கை
- வலிய
தும்பிக்கை
கரு நடர்
- கன்னட
நாட்டார் (களப்பிரர்)
கருப்புத்
தரளம்
- கரும்பின்
முத்து
கரும்
பெயல்
- கரிய
மேகம் பெய்தல், பெரு மழை
கருமை
- கறுப்பு
நிறம், பெருமை, வலிமை
கரு வழி
- பிறத்தற்கு
ஏதுவாய வழி
கரைக்
கொல்லும்
- கரையை
அழிக்கும்
கல்
- மலை,
நடுகல், சந்தனக் கல்
கல்குளி
மாக்கள்
- முத்துக்
குளிப்போர்
கல் புடை
ஆரம்
- கல்லைப்
பிளந்து எழுகின்ற சந்தன மரம்
கல்லவடம்
- ஒரு
வகை வாத்தியம்
கல்லலகு
- ஒரு
வகை வாத்தியம்
கல்லாது
உற்ற
- அறியாது
அங்குள்ள
கல்லை
- உண்ணும்
கலம், இலைக் கலம் (தொன்னை)
கல்வி
அற மா
மகள்
- கல்வியாய
அறம் பெருக்கும் மகள்
கலத்தும்
- கலந்து
கொள்வோம்
கலதியர்
- கலகம்
இயற்றுவோர்; தீக்குணமுடையோர்;
கீழோர்
கலன்
- கப்பல்
(கலம் என்பதன் போலி)
கலன்
- ஆபரணம்,
அணிகலம் கலி, ஓசை, ஒலி
கலி திரைப்
பரவை
- ஒலிக்கும்
அலையை உடைய கடல்
கலிமான்
- கனைக்குங்
குதிரை
கலுழ்தல்
- அழுதல்,
வருந்தல்
கவடு
- பெருங்
கிளை, கொம்பு
கவர்
- பிரிவு,
பிரியும் கிளை
கவலை
- சிறு
வழி, கவர்ந்த வழி
கவளம்
- உணவுத்
திரள், உருண்டையாகத் திரட்டிய உணவு
கவிப்
பாடகர்
- செய்யுள்
இயற்றுதல், பொருள் சொல்லல், பாடுதல்,
முதலியவற்றில் வல்ல புலவர்
கவிப்
புலவர்
- சங்கப்
புலவர்
கவிழ்ந்த
- தலைகீழாக
முளைத்த
கவைஇய
- உண்டாகிய,
உள்ளே இட்ட
கவைத்தீ
நா
- பிளவுள்ள
நாக்கினை உடைய தீ
கவைத்து
எழு
சொல்
- பலவாகப்
பேசும் பேச்சு
கழல்
- வீரர்கள்
காலில் அணிந்து கொள்ளும் ஒரு
வகை அணி
கழி துற்ற
- மிகவும்
நெருங்கிய
கழுக்கடை
- ஓர்
படை, ஈட்டியின் நுனி, சூலம்
கழைக்
கரும்பு
- இரசதாளிக்
கரும்பு
கழை நித்திலம்
- மூங்கில்
முத்து
களவு
- களாச்
செடி, களாமலர்; கள்ளத் தன்மை
களவுடல்
- பொய்த்தோற்றமான
உடல்
கற்பம்
- கற்ப
காலம்; நானூற்று முப்பத்திரண்டு கோடி
வருடம் கொண்ட பிரமனது ஒருநாள்; பிரமனுக்கு
விதிக்கப்பட்ட வாழ்நாள்
கறங்குதல்
- சுழல்தல்,
ஒலித்தல், முழங்குதல்
கறாது
- கரு
நிறம் கொள்ளாமல்
கறுத்து
- சினந்து,
கருமை பெற்று, மாறுபட்டு
கறை
- கறுப்பு,
களங்கம், உரல்
கன்னி
- இளம்
பெண், அழிவின்மை, உமையம்மை,
துர்க்கை