தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalladam-நா


நா உடன்று
- நாக் குழறி
நாசி
- பாடும்போது தோன்றும் மூக்கொலி
நாஞ்சில்
- கலப்பை
நாட்டி
- நாட்டமுடையாள்
நாடலர்
- விரும்பாதவர்
நாண் தறி
- நாணமாகிய தூண்
நாதம்
- ஒலி
நாப்பண்
- நடு
நாமம்
- அச்சம்
நாரணன் நடித்த
- திருமால் கூறிய
நால் நூல்
- தொங்குகிற பூணூல்
நால் நூல்
மாக்கள்
- அந்தணர் (தொங்குகிற பூணூலை உடையவர்)
நாவலந் தண்
பொழில்
- நாவலந் தீவு, சம்புத் தீவு (பாரத நாடு)
நாவாய்
- கப்பல்
நாள்
- நல்நாள்
நாள் இழைத்து
- வருநாளைக் குறித்துக் கூடல் இழைத்து
நாள் நிறைந்து
- நெடுங் காலம்
நாள்பூ
- அன்றலர்ந்த மலர்
நாற்றி
- தொங்க விட்டு
நாறுதல்
- தோன்றுதல், மணத்தல்
நாறு
- நாற்று முடிகள்
நான்மறை
- இருக்கு, யசுர், சாமம், அதர்வணம், ஆகிய
  நான்கு வேதம்
நான்மறைப் பாலன்
- (மார்க்கண்டன்) நான்கு வேதங்களில் வல்ல
  அந்தணச் சிறுவன்
நான்று
- தாழ்ந்து
நான்றென்ன
- பெய்ததுபோல
நானம்
- புழுகு

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:48:30(இந்திய நேரம்)