தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalladam-பி


பிடவு
- ஒரு வகைச் செடி
பிடர்
- பிடரி, கழுத்து
பிடி
- பெண் யானை
பிணங்கும்
- ஊடும்
பிணர்
- சருச்சரை (சுரசுரப்பு)
பிணர் மருப்பு
- சருச்சரைக் கொம்பு
பிணவு
- பெண்
பிணாவினர்
- பெதும்பைப் பருவப் பெண்கள்
பிணிக்க
- கட்ட
பிணிமுகம்
- மயில்
பிணிமொழி
- கேட்டாரைப் பிணிக்கும் சொல்
பிணிவிசி
- சேர்த்து இறுகக் கட்டிய வார்
பிரசம்
- தேன்
பிலம்
- மலைக் குகை
பிலிற்றிய
- துளித்த
பிழியும்
- சொரியும்
பிளிறும்
- முழங்கும்
பிறக்கிட்டு
- புறமுதுகிட்டு
 பிறங்க
- பெருக
பிறையவன்
- பிறையணி பெருமான், சிவன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:50:11(இந்திய நேரம்)