Primary tabs
மறிந்து அறியாவண்ணம் வைகும்
பொடி அணியும் திருமேனிப் புனிதன், மதுரைக்கு
இறைவன் புகழ்-இன் பாடல்,
நெடிய கவி, கல்லாடர், பொருள்-துறையை
நிகழ்த்துதொறும், திங்கள் சூடும்
முடி அசைத்து, 'நன்று நன்று ஈது' என மகிழும்
எனின், நிகரா மொழிவது யாதே?
கொவ்வை எழில் செவ் வாய்க் குறத்தேனை, நவ்வி
விழி யானையை, புணரும் வேளை--மதவெள்ளம்
பொழி யானையை--மனமே போற்று.
கொழிக்கும்
மனமாய், பாரின்
ஆய்ந்த முது தமிழ் வடித்து, 'கல்லாடம்' என ஒரு நூல்
அருளியிட்டார்--
தேய்ந்த மதிச் சடைப் பரமர் கருணைபெற, சங்க முது
செல்வர் வாழ்த்த,
காய்ந்த புலன் அடக்கி, உயர் பெரு ஞானம் பழுத்தருள்
கல்லாடனாரே.
வல்லார் சங்கத்தில் வதிந்தருளி, சொல் ஆயும்
மா மதுரை ஈசர் மனம் உவந்து கேட்டு, முடி
தாம் அசைத்தார் நூறு தரம்.