Primary tabs
புய வகுப்பு.
இரட்டை ஆசிரியச் சந்த விருத்தம்.
(முப்பத்திரண்டு சீர்கொண்டது)
தனதனன தந்தனத் தனதனன தந்தனத்
தனதனன தந்தனத்
தனதான தந்தன.
பினையொருது ரும்பெனச் சிலைகோலி விஞ்சின
அரவமரி கந்துசெக் கரினிலகு செஞ்சடைப்
பனிமதிய நண்புறப் புரியாம கிழ்ந்தன,
அகிலபுவ னங்களுக் கமுதிடுநி ரந்தரிக்
கிடமமர்வ ரங்கொடுத் தகலாத ணைந்தன,
அழலுருவ மன்றுபெற் றொருபுறவ மைந்தனுக்
கொளிவடிவு தந்தருட் பொலிவானி மிர்ந்தன,
கரடமத கும்பமத் தககபட தந்தியைச்
சமர்பொருது வென்றுரித் ததளாடை கொண்டன,
கடலமுதை உம்பருக் குதவஎழில் கந்தரத்
திலகுகறை கொண்டுதிக் கிருநால ளந்தன,
களபமணி அம்பிகைக் கனகதன மின்புறத்
தழுவிவரு மங்கலச் சுவடால்வி ளங்கின,
கதிர்மதிய மங்கிமுக் கணினொளித யங்கிடக்
கடுவுடைய திண்சினத் தகவாட நின்றன,
சரமழைபொ ழிந்தபற் குனனருள்பொ ருந்திடப்
பகைவர்கெடு வன்படைக் கொடையாலு வந்தன,
சமரபுரி கந்தனைப் புலவருய மண்டமர்த்
திறலவுணர் பங்கமுற் றிடுமாறு தந்தன,
சததளம லர்ந்தபொற் றவசினிலி ருந்தவச்
சதுமுகன்ம றங்கெடத் தலையோட ணிந்தன,
சலமிசைது யின்றசக் கரதரன லம்பெறத்
தருமவிடை யம்புறப் பரிவோ டிணங்கின,
இரவினவிர் திங்களிற் செலுமொளிபெ றுங்குழைக்
கவுரியிட மன்பினுற் றிடவாசை மிஞ்சின,
இரணியனு ரந்தொலைத் தெழுநரம டங்கலைச்
சரபவுரு வந்தரித் தமராடி வென்றன,
இடபமிசை வந்துபொற் பதநசைகொ ளன்பருக்
குயர்பதவி தந்திசைப் பருமோகை கொண்டன,
இனிமைதரு கம்பமுற் றருளநக எந்தைநித்
தியநிமல சுந்தரப் பரனார்பு யங்களே. (4)
இந்தச் செய்யுளின் கடைசியில் உள்ள புயங்களே எழுவாய்.
அரணெரிய . . . . கிழ்ந்தன,
(இ-ள்) அரண் எரிய - முப்புரங்கள் எரிந்து அழியவும், அந்தரத்து அமரர் - பொன்னுலகத்தில் வசிக்கின்ற விண்ணவர்களது, துயர் சிந்த-துக்கம் ஒழியவும், வெற்பினை - (மேரு) மலையை, ஒரு துரும்பு என - ஒரு துரும்புபோல, சிலை கோலி - வில்லாக வளைத்து, விஞ்சின - மேலாயின. அரவு - பாம்பு, அமர் இகந்து - போரை வெறுத்து, (பகை கொள்ளாமல்), செக்கரின் - செவ்வானம் போல, இலகு - விளங்குகின்ற, செஞ் சடை - சிவந்த சடையிலுள்ள, பனி மதியம் - குளிர்ந்த பிறைச் சந்திரனிடத்து, நண்பு உற - நட்புமிகக்கொள்ள, புரியா - புரிந்து (செய்து), மகிழ்ந்தன - மகிழ்ச்சி யடைந்தன. (புயங்கள் - தோள்கள் என்க) சடையிலுள்ள பாம்பு அச்சடையிலுள்ள குளிர்ந்த திங்களினிடம் பகை கொள்ளாமல் நண்பு உறப் புரியா, தோள்கள் மகிழ்ந்தன என இயையும்.
உற - உறு என்னும் உரிச்சொல் அடியாகப் பிறந்த வினையெச்சம். ‘உறுதவ நனியென வரூஉம் மூன்றும் மிகுதிசெய்யும் பொருள என்ப’ (தொல். சொல். உரி. 783.)