தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kachchik Kalambagam




அகிலபுவ    .   .   .   . ணைந்தன,

(இ-ள்) அகில புவனங்களுக்கு - எல்லா உலகங்களிலுள்ள உயிர்கட்கும், அமுதிடும் - உணவு கொடுத்த, நிரந்தரிக்கு - ஒன்றாய் நிலைத்த நல்லறம் ஆற்றும் உமாதேவிக்கு, இடம் அமர் - இடப்பாகத்தே விரும்பி உறையும்படியான, வரங் கொடுத்து - வரத்தைக் கொடுத்து, அகலாது - அவளை விட்டுப் பிரியாது, அணைந்தன - தழுவிக் கொண்டன (புயங்கள்). புவனம், இட ஆகுபெயர். அமுதம் இடுதலாவது, இருநாழி நெல்லைப் பெற்று அறம் வளர்த்து அதன் காரணமாக உணவளித்தல்.

நிரந்தரி - அந்தரமின்றி எங்கும் நிறைந்தவள். ‘அமர்தல் மேவல்’ (தொல். சொல். உரி 892) ஆகலின் ‘அமர்’ என்பதற்கு விரும்பி யுறையும் என்ற பொருள் கொள்ளப்பட்டது.

அழலுருவ    .     .   .   .  மிர்ந்தன,

(இ-ள்) அழலுருவம் - கனல் உருவத்தை, அன்று பெற்று - திருமணக்காலத்தில் பெற்ற, ஒரு புறவம் மைந்தனுக்கு - ஒப்பற்ற சீகாழியில் தோன்றியருளிய திருஞான சம்பந்தருக்கு, ஒளிவடிவம் தந்து - ஒளி வடிவைத் தந்து, அருட் பொலிவான் - கருணைப் பொலிவால், நிமிர்ந்தன - விளங்கின.

புறவம், சீகாழி:புறா பூசித்தமையால் சீகாழிக்குப் புறவம் என்ற பெயர் ஏற்பட்டது. புறா, புறவு என்று ஆகி அம் சாரியை பெற்றுப் புறவம் என நின்றது.

           

குறியதன் கீழ்ஆக் குறுகலும் அதனோ
டுகர மேற்றலும் இயல்புமாந் தூக்கின்’

என்பது நன்னூல் (172)

கரடமத    .    .   .   .  கொண்டன,

(இ-ள்) கரட மதம் - மதம் பாய்கின்ற சுவட்டையும், கும்பம் மத்தகம் - குடம் போன்ற மத்தகத்தையும், கபடம் - வஞ்சகத்தையும் உடைய, தந்தியை - யானையை, சமர் பொருது - போரில் பொருது, வென்று - வெற்றி கொண்டு, அதள் உரித்து - அதன் தோலை உரித்து, ஆடை கொண்டன - போர்வையாகப் போர்த்தன.

தந்தி: தந்தத்தை உடையது தந்தி; யானை: கயாசுரன் என்னும் யானை. அன்றித் தாருகாவனத்து இருடியர் ஏவிய யானையுமாம்.

“அத்தி யுரித்து அதுபோர்த் தருளும் பெருந்துறையான்”

(திருவாசகம் : திருப்பூவல்லி : 19)

கடலமுதை  .   .   .   .  ளந்தன,

(இ-ள்) கடல் அமுதை - திருப்பாற் கடலில் தோன்றிய அமுதத்தை, உம்பருக்கு உதவ - மேலிடத்தவராகிய தேவர்களுக்கு உதவும் பொருட்டு, எழில் கந்தரத்து - தனது அழகிய மிடற்றில், இலகு கறை கொண்டு - அவ்வமிர்தத்திற்குமுன் தோன்றி விளங்குகின்ற நஞ்சைக்கொண்டு, திக்கு இருநாலும் - எட்டுத்திசைகளையும், அளந்தன - அளந்தன (புயங்கள்.)

கறை - கறுப்பு என்னும் நிறப்பெயர்; நஞ்சுக்குப் பண்பாகு பெயர்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 23:32:50(இந்திய நேரம்)