Primary tabs
அறுசீர் ஆசிரிய விருத்தம்
வெளிவீட்
டாரைக் காட்டாரை
வியன்மா வாரைச் சேவாரை
ஒளிவிட்
டோங்குங் கச்சியரை
உயர்மா மறையின் உச்சியரைக்
களியுற்
றாடுங் கூத்தாரை
அகிலம் அனைத்துங் காத்தாரை
அளியுற்
றினிது புணர்ந்திடுதற்
கநங்கன் செயலொன்
றிலைமானே. (19)
(இ-ள்) வெளி வீட்டாரை - சிதாகாச முடையவரும், காட்டாரை - திருவாலங்காட்டில் ஆடுபவரும், வியன்மாவாரை - பெருமை வாய்ந்த மாமரத்தின் அடியில் வீற்றிருப்பவரும், சேவாரை - இடபவாகனத்தை உடையவரும், ஒளி விட்டு ஓங்கும் - ஒளிப்பிழம்பாய் உயர்ந்து எழும், கச்சியரை - காஞ்சிபுரத்தை உடையவரும், உயர்மாமறையின் - மிகச் சிறந்த வேதத்தின், உச்சியரை - உச்சியில் உள்ளவரும், களியுற்று ஆடும் - மகிழ்ச்சியுற்று ஆடுகின்ற, கூத்தரை - கூத்தை உடையவரும், அகிலம் அனைத்தும் - உலகம் முழுதும், காத்தாரை - காத்தவருமாகிய ஏகாம்பரநாதரை, அளியுற்று - அன்புற்று, இனிது புணர்ந்திடுதற்கு - இனிதாய்ச் சேர்ந்திடுதற்கு, அநங்கன் செயல் - மன்மதனது செய்கை. மானே - தோழியே, ஒன்றிலை - அவரிடத்தில் சிறிதும் இல்லை.
மா - மாமரம், சே - எருது, அநங்கன் - அங்கமில்லாதான் (உருவிலான் - மன்மதன்) மன்மதன் கச்சிப்பதியாருக்கு இச்சை உண்டாக்கவில்லை. ஆதலின், அச்சிவபிரான் என்னை விரும்பவில்லை. தோழியைப் பார்த்துத் தலைவி கூறியது. மான் - மான்போன்றவளாகிய தோழி - உவமை யாகுபெயர்.