Primary tabs
அறுசீர் ஆசிரிய விருத்தம்
       
 தொண்டர்க் குறவே யானாரைத்
             தூய 
 மறைமா நிழலாரை
       அண்டர்க் 
 கிறையா மடலாரை
             அக்கும் 
 எலும்பும் அணிவாரைக்
       கொண்டல் 
 வண்ணன் எண்கண்ணன்
             கூறற் 
 கருஞ்சீர் கொண்டாரைக்
       கண்டத் துறையு  
 மாறுகடற்
             கடுவுண் 
 டாரைத் துதிப்பாமே.                      (41)
 
(இ-ள்.) தொண்டர்க்கு - அடியவர்க்கு, உறவே ஆனாரை - உறவாக ஆனவரை, தூய - மறுவற்ற, மறைமா நிழலாரை - வேதமாகிய மாமரத்தின் நிழலில் எழுந்தருளியவரை, அண்டர்க்கு - வானவர்க்கு, இறை ஆம் - தலைவராகிய, அடலாரை - வல்லமை உடையாரை, அக்கும் எலும்பும் அணிவாரை - சங்கு மணியையும் எலும்பையும் அணிபவரை, கொண்டல் வண்ணன் - முகில் போன்ற கருநிறமுடைய திருமாலும், எண் கண்ணன் - எட்டுக் கண்களையுடைய நான்முகனும், கூறற்கு - இத்தன்மையன் என்று சொல்லுதற்கு, அருஞ் சீர் கொண்டாரை - அரிய சிறப்புக் கொண்டவரை, கண்டத்து உறையுமாறு - கழுத்தில் தங்கும்படி, கடல் கடு உண்டாரை - கடலின்கண் தோன்றிய நஞ்சை உண்டவரை, துதிப்பாமே - யாம் துதிப்போம், ஏ நெஞ்சே நீயும் வருவாயாக.
துதிப்பாம் - தன்மைப்பன்மை.
எலும்பு அணிவார்: “கங்காளம் ஆமாகேள் காலாந் தரத்திருவர் தங்காலஞ் செய்யத் தரித்தனன்காண் சாழலோ” என்பதனாலும் அறியலாம்.
 
						