Primary tabs
பாங்கனொடு குறத்தியடயாளங் கூறல், குறவன் குறத்தியைக்
கண்ணுறுதல், குறவன் அனி முதலிய கண்டு ஐயுற்றுக் கேட்டலும்
அப்போதைக்கப்போது குறத்தி விட கூறலுமாகக் கூறல்; பெரும்பான்மையும்
இவ்வகை யுறுப்புக்களால் அகவல், வெண்பா, தரவு கொச்சகம், கலித்துறை,
கழிநெடில் விருத்தம், கலிவிருத்தம் இச்செய்யுள் இடையிடையே கூறிச் சிந்து
முதலிய நாடகத் தமிழாற் பாடுவது.
சரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம் தஞ்சாவூரில் அரசு செலுத்திய
மகாராட்டிர மன்னர்களுள் ஒருவரான இரண்டாவது சரபோஜி மன்னர்
(A. D. 1800-1832) மீது, அவரது அவைக்களப் புலவராக யிருந்த
கொட்டையூர், ஸ்ரீசிவக்கொழுந்து தேசிகர் என்பவராற் பாடப்பட்டது.
இடையிடையே விருத்தம், அகவல், வெண்பா முதலிய செய்யுட்களையும்,
வசனத்தையும் கலந்து கீர்த்தன வடிவமாக அமைந்துள்ளது. படிப்போர்
எளிதில் அறியும் வண்ணம் எளிய நடையில் அமைந்துள்ளது. சரபோஜி
மன்னர் பாட்டுடைத் தலைவராக இருப்பினும் தஞ்சைப் பெருவுடையாரின்
சிறப்பும், மகாராட்டிர மன்னர் வழிபடு தெய்வமாகிய ஸ்ரீ பவானி சந்திர
மௌளீஸ்வரரின் பெருமையும் கொண்டு சங்கீதமும், அபிநயமும், நடனமும்
கலந்துவரும் ஒரு நாடக நூலாகும்.
இக்குறவஞ்சி நாடகமான தற்போது தஞ்சை சீனியர் பிரின்ஸும்
பரம்பரை டிரஸ்டியுமான இராசராச ஸ்ரீ இராஜாராம் ராஜா சாகேப் அவர்கள்
ஆதீனத்துக்குட்பட்ட தஞ்சைப் பெருவுடையாராலயத்திலே [பிரஹதீஸ்வரர்
கோயில்] வருடந்தோறும் நடந்துவருகிற சித்திரை பிரமோற்சவ காலங்களில்
எட்டாந் திருநாள் மாலையில் பெருவுடையார் திருமுன் ஒத்திகையாகவும்,
அஷ்டகொடி என்று சொல்லப்படுகின்ற ஒன்பதாந் திருநாளன்று இரவு
தியாகராசப் பெருமான் உலாவந்து வசந்தமண்டபத்தில் எழுந்தருளிய பின்னர்
நாடகம் நடத்துவதற்கென்று ஏற்பட்ட மேடையில் தேவரடியார்களால்
நடிக்கப்பட்டும் வருகிறது.அன்றியும் போசல குல வம்சத்தினரின் திருமணக்
காலங்களிலும் இதர