Primary tabs
விசேஷ தினங்களிலும் அவர்கள் வழிபடு தெய்வமாகிய தஞ்சை
அரண்மனையிலுள்ள ஸ்ரீ சந்திர மௌளீஸ்வரர் சன்னதியிலும்
அரண்மனையிலும் அரண்மனை தேவஸ்தான பரம்பரை டிரஸ்டியின்
உடன்பாடு பெற்று நடிக்கப் பெற்று வருகிறது.
இந்நாடக நூல் ஏற்பட்ட காலம் முதல்கொண்டு இதில் உள்ள
பாட்டுகளுக்கென்று அமைத்துள்ள தீர்மானங்களும் சுரங்களும், சரபோஜி
மஹாராஜா காலந்தொட்டு நாடகம் நடத்துங் காலங்களில் பாடப்பட்டு
வழங்கிவருகிறது. இன்றியமையாத சிற்சிலவிடங்களில் உரைநடையில்
உரையாடலும் சேர்ந்திருக்கிறது.
இந்நாடகத்தில் மதனவல்லி மன்மதனைப் பழிக்கும் பாட்டில் (19)
பத்தொன்பது வருடங்களின் பெயர்களை யமைத்துப் பாடப்பட்டிருப்பது
அறிந்து மகிழத்தக்கதாயிருக்கிறது. அன்றியும் முதல் வருடமாகிய பிரபவ
என்று துடங்கி, இறுதி வருடமாகிய அக்ஷய என்று நயம்பட முடித்திருப்பது
வியக்கத்தக்கதே.
சரபோஜி மன்னருடைய வாசல் வளம் கூறும் பகுதி படித்துப் படித்து
இன்புறத்தக்கதாகும்.
குறத்தி தெய்வங்களை வேண்டும்போது தஞ்சை அரண்மனை
தேவஸ்தானங்களில் உள்ள கோயில்களில் எழுந்தருளியிருக்கின்ற இரட்டைப்
பிள்ளையார், வெள்ளைப் பிள்ளையார், ஆனந்தவல்லி முதலிய
தெய்வங்களை பரவுவதாகக் கூறப்பட்டிருக்கிறது, இன்னும் இவைபோன்ற
பலவற்றையும் இந்நூலில் விளங்கக் காணலாம்.
இந்நாடகத்தை நடிக்க அல்லது பேசும் படமாகபிடிக்க
உத்தேசமுள்ளோர் தேவஸ்தான பரம்பரை டிரஸ்டி அவர்களின் எழுத்து
மூலமான சம்மதத்தைப் பெற்றாலொழிய நடத்தக்கூடாது இந்நாடகத்தின்
எல்லா உரிமைகளும் தேவஸ்தானத்தாருக்கு சொந்தமானது.
தஞ்சாவூர்.L. S.
26-12-40
சுவாமிநாதய்யர், B.A., B.L.,
டிரஷரர் & மானேஜர்.