Primary tabs
என்று கூறுவது போல்
கொங்குநாட்டினைப் பல்வேறு நிலைகளில் படம்
பிடித்துக் காட்டுகின்றன இக்கொங்கு மண்டல சதகநூல்கள்.
செய்திகள்
நாட்டின்
எல்லைகள், நாடுகள், மலைகள், ஆறுகள், தலங்கள் என
நிலவியல் நிலையில் கொங்குநாட்டின் அத்துணைச் செய்திகளையும்
இந்நூல்கள் தொகுத்துத் தந்துள்ளன. காவிரியின் உற்பத்தியிலிருந்து
தொடங்கி, இறைவன் எழுந்தருளியுள்ள தலங்கள் குறித்தும், அந்நாட்டில்
வாழ்ந்த புலவர்கள் புரவலர்கள் குறித்தும் அரியபல செய்திகள்
காணக்கிடக்கின்றன.
நூல்கள்
உரையாசிரியர்கள்
சதகப் பாடல்களை விளக்குதற்காகக் காட்டப்பெற்ற
நூல்களுள் பல கொங்குநாட்டுச் சிற்றிலக்கியங்களாக விளங்குகின்றன.
அவற்றுள் இன்னும் பல பதிப்பிக்க வேண்டிய நிலையில் உள்ளமை பெரிதும்
குறிப்பிடத்தக்கதாகும். அந்நூல்கள் வருமாறு:
இந்நூல்கள் அனைத்தையும்
தொகுத்து ஆராய்ந்தால் அண்மைக் கால
வரலாற்றில் பல புதிய சிந்தனைகளும் கிடைக்கக் கூடும்.