Primary tabs
குலோத்துங்க சோழனுக்குப் படைத் தலைவனாய் அமைந்திருந்த
கருணாகரத் தொண்டைமான் தொண்டை நாட்டை ஆண்டுவந்த
அரசர் குலத்தைச் சார்ந்தவன் என்பது அவன் பெயராலேயே
அறியக்கிடக்கின்றது. இவனைத் தொண்டைமான் என்றே பல இடங்களில்
ஆசிரியர் கூறுகின்றார்.
றாசை கொண் டடற் றொண்டைமான்'
என வருமாறு காண்க. இவன் தமையன், காஞ்சியில் இருந்து
தொண்டை நாட்டை ஆண்டுவந்த பல்லவ அரசனாவன். இப்பல்லவன்
பெருமன்னனான குலோத்துங்கனுக்கு உட்பட்ட பல சிற்றரசர்களுள்
ஒருவனாய்
நெருங்கிய நண்பனாகவும் இருந்தான் எனத்
தெரிகிறது.
இந்நட்புக்காரணமாகவே பெருமன்னனாகிய குலோத்துங்கன்
காஞ்சியில் வந்து
படைகளுடன் தங்கியிருந்தனன் என்க. கலிங்கத்தின்
மேல் கருணாகரன்
படைத் தலைவனாய்ப் போர்க்கெழுந்தபொழுது,
இவன் தமையனும்,
குலோத்துங்கனுக்கு நட்புரிமை பூண்டவனுமான
பல்லவனும் துணைப்படைத்
தலைவனாக உடன்சென்றானாகக்
குறிக்கப்படுகின்றான்.
துங்க வெள்விடை உயர்த்த கோன்
வண்டையர்க்கரசு பல்ல வர்க்கரசு
மால்களிற்றின் மிசை கொள்ளவே'
எனவருமாறு காண்க. தமையன் தொண்டைநாடு முழுதும் ஆட்சி
செய்து கொண்டிருப்ப, குலோத்துங்கனுக்குப் படைத்தலைவனாய்
அமைந்த கருணாகரன், வண்டைநகரின் கண் இருந்து தொண்டை
நாட்டுப்பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்தவனாக அறியப்படுகின்றான். மேற்குறித்த