Primary tabs
பேரரசர்கட்கு மகளிரைத் திறையாகவும் இடுவர்போலும்,
மலைநாடியர் துளுநாடியர் மனையிற்கடை திறமின்'
எனக் கடைதிறப்பில் வந்தவாறு காண்க. அவ்வகையான பெண்கள்
தங்கள் மொழியோடு தமிழையும் கலந்து பேசுவது
கேட்போர்க்கு நகை
விளைத்து இன்பஞ் செய்யுமென்பது,
குழறித்தரு கருநாடியர் குறுகிக்கடை திறமின்'
என வருவதால் பெறப்படும்.
இனி, போர்க்களத்தே குடை, சாமரம் முதலியன பயன்படுத்தப் பெறும்
என்பதும், தோற்றோடிய அரசர் விட்டுப்போன குடை, சாமரம் முதலியவற்றை
வென்ற வேந்தர் கைப்பற்றி அவற்றைப் பெருமையுடன்
பயன்படுத்துவர்
என்பதும் அறியப்படுகின்றன. குலோத்துங்கன் காஞ்சியில்
செய்தமைத்த
சித்திரமண்டபத்தே வீற்றிருந்த காலையில்
தங்கள் பொற்குடை சாமரம் என்றிவை
தாங்கள் தங்கரத் தாற்பணி மாறவே'
என ஆசிரியர் கூறியவாறு காண்க.
இதனால் சிற்றரசர்
பேரரசர்க்குக் குற்றேவல் புரிதலும் உணர்த்தப்படுகின்றது.
இனிப் போரில் தோற்றோடிய அரசர் மலைமுழைகளிலும், மலைப்
பள்ளத்தாக்கிலும், காட்டிலும், கடலிலும், மறைவது அக்கால இயற்கையாகத்
தெரிகிறது. கருணாகரன் இயற்றிய போரில் ஆற்றாது மறைந்தோடிய கலிங்க
வேந்தன்,
அரிய பிலனிடை யோம றைந்தது.