தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalingathuparani


இனி, வெற்றி கொண்ட அரசர் போர்க்களங்களில் கவரும் பொருள்களாகக் கூறப்படுவன யானை, குதிரை, ஒட்டகம், இரதம், செல்வம், முதலியவற்றோடு மகளிருமாம். கலிங்கப் போர்க்களத்தே,

‘கைப்படு களிறும் மாவும் கணித்துரைப் பவர்கள் யாரோ’

என்றும்,

‘நடைவ யப்பரி இரதம் ஓட்டகம்
நவநி திக்குலம் மகளி ரென்
றடைய அப்பொழு தவர்கள் கைக்கொளும்
அவைக ணிப்பதும் அருமையே’

என்றும் கூறப்படுமாறு காண்க. இவற்றுள் யானைகளைக் கவர்ந்து வருதலே பெருவெற்றியாகக் கருதப்பட்டதாகத் தெரிகிறது. குலோத்துங்கன் கருணாகரனுக்குக் கட்டளையிடுங்கால்,

'அளிஅ லம்புமத மலைகள் கொண்டனைமின்
அவனை யும்கொணர்மின் எனலுமே'

எனக் கூறுமாற்றால் இது தெரிகிறது.

அரசர்கள் பகைவரை வென்றபின், தாம் பற்றிக்கொணர்ந்த அவர் தம் மகளிர் வாழ்வதற்கெனத் தனியிடத்தில் மாளிகை யமைப்பரென்றும், அது ‘வேளம்’ எனப் பெயர் பெறும் என்றும் தெரிகிறது. கடை திறப்பில்,

'மீனம்புகு கொடி மீனவர் விழி அம்புக ஓடிக்
கானம்புக வேளம்புகு மடவீர் கடைதிறமின்'

என வருமாறு காண்க. குலோத்துங்கன் காஞ்சியில் செய்தமைத்த சித்திரமண்டபத்தே வீற்றிருந்தபொழுது,

'தென்ன ராதிந ராதிப ரானவர்
தேவி மார்கள்தன் சேடிய ராகவே'

எனக் கூறப்பட்டதும் ஈண்டு நோக்கத்தக்கது.


புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2017 14:06:55(இந்திய நேரம்)