Primary tabs
பரணிக் கூழ் அட்டு உண்டு மகிழ்ந்தவிடத்து அவை ஆடினவாகக்
கூறும் ஆசிரியர்,
எனக் கூறுமாற்றால் அறியலாம்.
களிமண் இட்டுத் தேய்த்துத் தலையில் எண்ணெய்ப் பசை போக்கும்
இயல்பு, பேய்கள்,
என்னும் களியால் மயிர்குழப்பி'
எனக் கூறுமாற்றால் அறியப்படுகிறது.
இனி, அக்காலத்துக் கணவர் பிரிந்த மகளிர்கூடற் சுழி இழைத்து,
அச் சுழி கூடின், கணவர் விரைவில் வருவரென்றும், கூடாதாயின்
அவர் வரக் காலம் நீடிக்கும் என்றுங்கொண்டு அங்ஙனம் இழைத்துப்
பார்க்கும் இயல்பினராவர். இங்ஙனம் கூடல் இழைத்து நிற்கும்
இயல்பினைக் கடைதிறப்பில் ஒரு தாழிசை காட்டுகின்றது.
மீள்வரெ னக்கருதிக் கூடல்வி ளைத்தறவே
கையில ணைத்தமணல் கண்பனி சோர்புனலில்
கரையவி ழுந்தழுவீர் கடைதிற மின்திறமின்'
என்பது அது.
கணவன் இறந்தபின், கற்புடைப் பெண்டிர் அக்கணவனோடு தீயில்
மூழ்கும் வழக்கமும் அக்காலத்துண்டு. போர்க்களக் காட்சியுள்
ஒன்றனுக்குவமை கூறுங்கால்,
கற்புடைமா தரைஒத்தல் காண்மின் காண்மின்
என வந்தது காண்க.
சூல்மகளிர் சுவையுணர்ச்சி மிக்கவராம் இயல்பினைப் பேய்கள் கூழ்
வார்க்கு மிடத்துப் பேய்கள்மேல் வைத்துக்,