Primary tabs
என வரும் குறிப்பால் உணரப்படுகின்றது.
இனி, அக்கால மக்கள் பொழுது போக்காகக் கொண்டிருந்தவை
கோழிப்போர், யானைப்போர், மற்போர், வாதப்போர் முதலியனவாம்.
குலோத்துங்கன்,
சொற்புலவோர் வாதப் போரும்
இருசிறைவா ரணப்போரும் இகன்மதவா
ரணப்போரும் இனைய கண்டே'
எனக் கூறப்படுமாற்றால் இஃது உணரப்படும்.
இனி, அக்காலத்தே அரசன் போன்ற உயர்ந்தோர்க்கு விருந்திடுங்கால்
பகல் விளக்கு வைத்தும், கீழே ஆடை விரித்து அதன்மேல் பொற்கலம்
முதலியவற்றை இட்டும் உணவு படைக்கும் வழக்கமிருந்ததாகத் தெரிகிறது.
பேய்கள் பரணிக் கூழுண்ணுங்கால்,
பாவா டையுமாக் கொள்வீரே'
என உரைக்குமாற்றால் இஃது உணரப்படும். இன்றும் கோயிலிற்
கடவுளர்க்குப் பாவாடை போடுதல் என்னும் வழக்கம் வழங்கி வருதல்
உணரத்தக்கது. முற்காலத்திற் பொன், வெள்ளி, மண் முதலியவற்றானாய
கலங்களே உண்கலமாக வழங்கப்பட்டன என்றும் இலை பிற்காலத்தே
கொள்ளப்பட்டதென்றும் தெரிகிறது. நிலத்தே பரப்பப்பெறும்
ஆடையாதலின் பாவாடை விரித்தல் போல் அரசர் முதலியோர் நடந்து போதற்கும் பாவாடை விரித்தல் வழக்கமாம்.
வெறுநிலத்தில் உண்கலம் பரப்பவேண்டின், நிலத்தே நீர் தெளித்துப்
பின் கலம் வைத்தல் வழக்கமாம். பரணிக்கூழுண்ணற்குப் பேய்,