தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU

28
முக்கூடற் பள்ளு

7. வெகுளி

இளைய பள்ளி பள்ளனைக் குடிலில் மறைத்து வைத்துக் கொண்டு அவன் வெளியே போய் மூன்றுநாள் ஆய்விட்டது என்று பசப்புகிறாள். அதைக்கேட்ட பண்ணைக்காரன் வெகுண்டு பேசுகின்றான்.

"முக்கூடற்பள்ளியைப் போல்
சொக்காரி நீயல்லவே
வக்கணை ஏன் மருதூர்
அக்கிரமப் பள்ளி"

"குச்சுக்குள்ளே பள்ளனையும்
வைச்சுக் கொண்டதட்டாதேவாய்
தைச்சுப்போடு வேன் மருதூர்க்
கச்சற் காய்ப் பள்ளி"

என்ற பாடல்களிலும்; பள்ளியரின் ஏசலில்,

"நாவி என்றாய் பூனை என்றாய்
மருதூர்ப் பள்ளி--நாவி
நானடி பூனைமூளி
நாயும் நீயடி"

என்று வரும் பாட்டிலிலும் வெகுளி காண்க.

8. நகை

பண்ணைக்காரனின் தோற்றத்தை,

"மாறு கண்ணும் பருத்திப்பைக்
கூறு வயிறும்--கீரை
     மத்துப்போல் தலையும் சுரை
     வித்துப்போல் பல்லும்
நீறுபோல் வெளுத்த வூளை
ஊறு நாசியும்--தட்டி
     நெரித்தமாங் கொட்டை போல்ஈ
     அரித்த வாயும்"

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2017 17:58:29(இந்திய நேரம்)