Primary tabs
நல்லோர் வாழுநாடே நாட்டினுள் நனிசிறந்த நாடாகும் என்னும் கொள்கையுடையார் என்பதனை,
(புறநா. 187)
எனவரும் அச் சங்ககாலத் தமிழ் மூதாட்டியாகிய ஒளவையார் அருண்மொழியே உணர்த்தும்.
பிற்காலத்தே தோன்றிய ஒளவையார் இத்தகைய சிறப்பினை இத்தொண்டை நாட்டிலே கண்கூடாகக் கண்டு மகிழ்ந்தார். மகிழ்ந்ததோடன்றி இச்சிறப்பினை "என்றும் கிழியாத" தம் பாட்டொன்றிலே சேர்த்தும் வைத்தார். அத்திருநாட்டிலே தோன்றுந் திருவுடைய நம் கச்சியப்ப முனிவர் அச்செய்யுளைக் கண்டு உளம் பூரித்திருத்தல் வேண்டும். இவ்வாறு புலவர் பாடும் இத்தகைய ஒப்பற்ற புகழையுடைய இத்தொண்டை நாட்டிற்கு வேறு எந்த நாடுதான் ஈடாகவியலும் என்று இவர் பெருமை பேசிக்கொள்கின்றார். இதோ அவர் கூறுவதைக் கேளுங்கள் :
(திருநாட், 8)
என்பது அம்முனிவர் கூற்று. இதனோடு அந்த ஒளவையார் பாடிய அரிய செய்யுளையும் காண்பாம். அது வருமாறு :
என்பதாம். செப்பேட்டிற் செதுக்கி வைத்தாலும் கல்லில் உளி கொண்டு பொறித்து வைத்தாலும் இந்தச் சீர்த்தி ஒருகாலத் தழிந்துபோதல் ஒருதலை. அந்தத் தமிழ்க் கிழவி தன் பாட்டிற் பொதிந்து வைத்தமையால் இப்புகழ் இந்நாட்டிற்குத் தமிழ்மொழி யிருக்குங் காலமெல்லாம் நின்று நிலவுமே! இத்தகைய புகழ்க்கு முன்னே ஏனைய நாட்டின் புகழ்களெல்லாம் ஞாயிற்றொளியின் முன்னே நாண்மீன்களின் புல்லொளி மறைவதுபோல மறைவனவாம் என்கின்றார் இப்புலவர் பெருமான்.
இனி, கச்சியப்ப முனிவர் இச் செய்யுளைப் பாடியபொழுது செந்தமிழ்க்கடலன்ன ஒளவையாரின் பாட்டொன்று அவர் நினைவில்