தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

!!!!!!!!!!!!!!Thanikai Puranam!!!!!!!!!!!!!!

என மெய்யுணர்ந்த வித்தகரும் வியக்குமாறு பாடியிருத்தல் நினைந்து நினைந்து மகிழற்பாலதாம். இவ்வாறு இறைவன் ஆர்த்து நின்றாடியது இத் தணிகையிலே தான் ஆதலாற்றான் இத் தணிகைக்கு "வீராட்டகாசம்" எனவும் ஒரு பெயருளதாயிற்று என்றறிவுறுத்துகின்றார் நூலாசிரியர்.

இனி, தணிகை என்னும் இத் தமிழ்ப் பெயர்க்குக் காரணம் கூறுவார்,

"இரணவல் லவுணக் கிளையெலா முருக்க
 இலங்கருட் டிருவுருத் தாங்கி
 அரணமா யமரர்ப் புரப்பவ னென்றும்
 அமர்ந்தருள் தணிகை மாநகரம்"

(120)

எனப் பெயர் வந்தது என்பது முனிவர் கருத்து. கந்தபுராணம் பாடிய கச்சியப்ப சிவாசாரியர் கருத்து மிதுவேயாம்.

இனி, இத் தணிகை என்னும் பெயர்க்கு இயற்கையிலேயே செய்யுளியற்றும் ஆற்றலுடன் பிறந்த கவிவரர் சுப்பிரமணிய பாரதியார் கூறுகின்ற காரணமும் ஈண்டுக் கருதற்பாலதாம் :

"திருத்தணிகை மலைமேலே குமார தேவன்
 திருக்கொலுவீற் றிருக்குமதன் பொருளைக் கேளீர்
 திருத்தணிகை யென்பதிங்கு பொறுமை யின்பேர்
 செந்தமிழ்கண் டீர்பகுதி 'தணி'எ னுஞ்சொல்
 பொருத்தமுறுந் தணிகையினாற் புலமை சேரும்
 பொறுத்தவரே பூமியினை யாள்வார் என்னும்
 அருத்தமிக்க பழமொழியுந் தமிழி லுண்டாம்
 அவனியிலே பொறையுடையான் அவனே தேவன்"

என்பது அப்புதுமைக் கவிவரரின் பொன் மொழியாகும். தணிகை என்பது பொறுமையின் பெயர் என்று பாரதியார் பொருள் கண்டு கூறுதலும் ஒரு புதுமையே! அதனாலன்றோ அவரை நாம் புதுமைக் கவிவரர் என்று போற்றுகின்றோம்!

(5) குமாரேசப் படலம்

இதன்கண் முருகப் பெருமான் அருட்குறி நட்டுச் சிவ பெருமானை வழிபாடு செய்தமையும் அதனால் தணிகையிலுள்ள சிவபெருமான் 'குமாரேசன்' என்று வழங்கப்படுதலும் தணிகையிலுள்ள குமரேசன் குமரனுக்கு ஞானசத்தி வழங்கியதனால் அதனைப் பெற்ற முருகன் ஞானசத்திதரன் என்றொரு திருப்பெயர் பெற்றமையும் திருத்தணிகையிலெழுந்தருளிய முருகனுடைய திருப்பெயர்களுள்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 02:23:25(இந்திய நேரம்)