Primary tabs
சரவணப் பொய்கையின் பாங்கர் அருந்தவமாற்றிய செய்தியும் அவ்விருவருள் அமுதவல்லி "இந்திரன் பாங்கர் அண்மிமன்னு நாற் கோட்டு வேழம் வளர்த்திடத் தெய்வயானை என்னும் அப்பெயரின்" வைகிய செய்தியும் "எம்பிரான் பரங்குன்றத்து முன்னினன் வதுவை யாற்றத் தவப்பயன் முற்றி" நின்ற செய்தியும் ஒரு செய்யுளிலேயே நயம்படக் கூறிவைத்துப் பின்னர்ச் சுந்தரிப் பெயரினாள் எரி வளர்த்து அத் தூலதேகத்தை நீக்கி, சூக்குமதேகத்தால் தொண்டை நாட்டில் மேற்பாடி நாட்டுக் குறிஞ்சி நிலத்திலே உயர் தவம் ஆற்றிய செய்தியும், அப் பெருமகள் மான்மகளாய செய்தியும், வேடர் கோமான் கண்டெடுத்துப்போய் அன்புடன் வளர்த்தமையும், அவள் தினைப்புனம் காவல் பூண்டமையும், யாழ் முனிவன் நாரதன் வள்ளியின் வனப்பினை முருகன் மனமுருகும்படி கூறிய செய்தியும், முருகன் வள்ளியைக் களவு மனம் புணர்ந்தமையும் அழகுற முனிவர் பாரித்து விளம்புகின்றனர். சீபரிபூரணநாமப் படலம் செந்தமிழ்க்கேயுரிய பொருணெறி மரபுகள் இரண்டனுள் புறப்பொருளின்பாற் படுகின்ற பொருட்பாலாகும் என்று முன்னரே கூறினேம். ஈண்டு வருகின்ற களவுப் படலம் முதலியன அகப்பொருள் எனப்படும் காமத்துப்பாலாம் என்றும் கூறினேம். இக்கருத்தே கொண்டு இந்நூலாசிரியர் இந்நூலின் படலங்களை முறை செய்து பாடுகின்றார் என்னும் உண்மையை அம் முனிவரே கூறக் கேண்மின்! - வள்ளியை மணம் புணர எம்பிரான் இன்றே எழுந்தருளுக, என்று நாரதன் கூற முருகக் கடவுள்,
என்பது நூலாசிரியர் கூற்று.
களவெனு மின்பக் கடற்றுறையில் இம் முனிவர் பெருமான் நாட்டிய செய்யுள்கள் நனிபேரின்பம் நல்குகின்றன. இவர்க்குமுன் இச்செய்தியைப் பாடிய கச்சியப்ப சிவாசாரியார் புராண மரபு பற்றித் தமது கந்தபுராணத்தில் பாடியுள்ளார். ஒரோவழி கந்தபுராணம் பாடிய அம் மாபெரும் புலவர் கச்சியப்ப சிவாசாரியரே தமது முதுமைப் பொழுதில் வள்ளி திருமணத்தைத் தாம் அகப் பொருணெறிபற்றிப் பாடாது விட்டமை ஒரு பெருங் குறையென்று கருதும் குறை கிடந்த மனத்தோடு பூதவுடல் நீத்தவர்
அவ்வினைக்