தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

!!!!!!!!!!!!!!Thanikai Puranam!!!!!!!!!!!!!!

ஆசிரியராகிய சிவஞான முனிவர்க்கு வணக்கம் கூறாமையால் சிவஞான முனிவர் இவர்க்கு ஆசிரியர் என்பது பொருந்தா தென்பர்.

இனி, கச்சியப்ப முனிவர் சிவஞான யோகியார்க்கும் மாணவராயிருந்தமையை அம் மாபெருந் துறவியாகிய சிவஞான யோகியார் சிவத்தோடிரண்டறக் கலந்த காலத்தே அச் சிவஞான முனிவரை இக் கச்சியப்ப முனிவர் மனமுருகி வணங்கிய செய்யுள் ஒன்று விளக்குகின்றது. அதுவருமாறு :-

"திண்ண வின்பச் சேவடியுந் திருவிழியும்
     திருமார்பும் செல்வக் கையும்
 நண்ணு மன்பர்க் கருள்கருணைத் திருமுகமும்
     பசுங்குழவி நடையே யாகிப்
 புண்ணி யத்தின் பொலிவாகி யற்புதக்கோ
     லக்கொழுந்தாய்ப் புலைநா யேற்குக்
 கண்ணை விட்டு நீங்காத சிவஞான
     சற்குருவே கருணை வாழ்வே"

எனவரும் இக் கையறுநிலைச் செய்யுள் கச்சியப்ப முனிவர் சிவஞான முனிவரை நினைந்தோதியதாம்.

இனி, சிவஞான முனிவரும் நமச்சிவாய மூர்த்திகள்பால் (பின்வேலப்ப தேசிகர்) சமய தீக்கை பெற்றவரே என்பதனை, சிவஞான முனிவரை மதுரையில் நான்காவது தமிழ்ச்சங்கம் நிறுவிய பாண்டித்துரைத்தேவர் புகழ்ந்து பாடிய செய்யுளின் கண் அம்முனிவரை,

"கலைதேர் நமச்சி வாயகுரு கருணைக்கடலிற் றிளைத்தாடிக்
     கலகப் பாசத் தொடரறுத்துக் காமத்தறியை அறவீழ்த்தி
 அலையும் சமயத் தருக்களைக்கீ ழடிவேரொடு மகழ்ந்தெறிந்திட்(டு)
     அருளின் படாத்தை முகமேற்கொண்(டு) ஆதிவேதாகமங்களெனும்
 தொலையா மணிக ளிருமருங்குந் தொனிக்கச் சைவ மதம்பொழிந்து
     துங்கமோடு முலகமுற்றுஞ் சுற்றும் வெற்றி வாரணமே
 மலையா தருளு முனிவர் சிகா மணியே வருக வருகவே!
     வளமார்துறைசைச் சிவஞான வள்ளால் வருக வருகவே!"

எனப் பாராட்டிய அழகிய அன்புச் செய்யுளாலறிக.

இனி, சிவஞான முனிவரும் கச்சியப்ப முனிவரும் அகவை யானும் மிகவும் வேற்றுமையுடையரல்லர். இவ் விரு பெரியோரும் பிறந்த காலம் தேற்றமாகத் தெரிந்து கோடற்கிடமில்லை யாயினும் இவ்விரு பேரொளிப்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 02:25:26(இந்திய நேரம்)