Primary tabs
பிழம்புகளும் மறைந்த காலங்கள் ஐயமறத் தெரிகின்றன. இவர் ஆசிரியராகிய சிவஞான முனிவர் சிவத்தொடு கலந்த காலம் சாலிவாகன சகாப்தம் ஆயிரத் தெழுநூற்றெட்டு விசுவாவசுயாண்டுச் சித்திரைத் திங்கள் எட்டாம்நாள் திங்கட் கிழமை ஆயிலிய நாள் (கி பி - 1784) என்று கூறுப. இதனை, சிவஞானமுனிவர் திருவாய் மலர்ந்தருளிய "செங்கழுநீர்ப்பிள்ளையார்" பிள்ளைத்தமிழ் என்னும் நூலிற் பாயிரத்தில் வருஞ் செய்யுளாலறிக. அது வருமாறு :-
என்பது.
இனி இத்தணிகைப் புராண ஆசிரியராகிய கச்சியப்பமுனிவர் சிவத்தொடு கலந்த காலம் சாலிவாகன சகாப்தம் ஆயிரத்தெழு நூற்றுப் பன்னிரண்டு சாதாரணயாண்டு, சித்திரைத் திங்கள் பதினொன்றாம்நாள், செவ்வாய்க்கிழமை புனர்பூசநாள் (கி. பி - 1788) என்று கூறுப. இதனை